குழந்தைகளுக்கு சளி, இருமல் சரியாக கற்பூரவல்லி இலை ( ஓமவள்ளி இலை )
குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, ஓமவள்ளி இலை சாற்றைக் குழந்தைகளின் மார்புப் பகுதியில் மென்மையாகத் தடவி விடலாம்.. அதேபோல, வயிறு உப்பி மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, இதன் இலைச்சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம். இலைச்சாறு சற்றுக் காரமாக இருக்கும் என்பதால், தேன் கலந்து சாப்பிடலாம்.
இந்த கற்பூரவல்லி இலைகளை கஷாயம் போல தயாரிக்கலாம்.. அதாவது, கொத்தமல்லி விதை, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை எடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பொடித்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு வாணலியில் 2 கப் தண்ணீரை ஊற்றி ஒரு கைப்பிடி கற்பூரவல்லி இலைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு, மிக்ஸியில் அரைத்த பொடிகளை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட்டு சுண்ட காய்ச்ச வேண்டும். இறுதியில், வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்தால், கற்பூரவல்லி கஷாயம் தயார். இருமல், சளி, தொண்டை வலி, போன்றவற்றுக்கு மிகவும் நல்லது..
0
Leave a Reply