பப்பாளியின் பயன்கள்
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
பப்பாளி காய் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள பப்பேன் என்ற நொதிகளைக் கொண்டிருப்பதால், செரிமானத்திற்கான இரைப்பை அமிலங்களின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற பாக்டீரியாவை வெளியேற்றுவதோடு வயிற்றில் நச்சுத்தன்மை இல்லாமல் வைக்கிறது.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் குணமடையும்.
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.
அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக்காயை சாறு அரைத்துக்குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி, விஷம் இறங்கும்.
பப்பாளி பழத்தினைஅடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்குதல் குறைவு.
0
Leave a Reply