சளி தொல்லைக்கு ஓமவள்ளி இலை
ஓமவள்ளி இலை, தூதுவளை, துளசி இலை.,3 இலைகள் மட்டுமே போதும்.. ஒரே நாளில் சுவாச கோளாறு ஓடிவிடும். சளி, காய்ச்சல் என்றால், மிளகு, இஞ்சி இந்த இரண்டை மூலிகைகளையும் தவிர்க்கக்கூடாது. மக்னீசியம், இரும்பு, வைட்டமின் K, நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டதுதான் மிளகு.
அஜீரண கோளாறுகளை மட்டுமல்லாமல், உடலை நச்சுக்களிலிருந்து காப்பாற்றி, புற்றுநோயிலிருந்தும் விடுவிக்க உதவுவதும் இந்த மிளகுதான். இந்த மிளகில் டீ போட்டு குடிப்பதால், கொழுப்புகள் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அந்தவகையில், மிளகு ரசம் போலவே, 2 புதினா இலைகளை சேர்த்து மிளகு டீ தயாரித்து குடித்தால், சுவாச கோளாறுகள் தீரும்.
இஞ்சியும் அதுபோலவே, தொண்டைக்கு இதமான பண்புகளை கொண்டுள்ளது. அதனால்தான், இருமலுக்கான சிரப்புகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. இது சளியை நீக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது.. நுரையீரலிலிருந்து சளியை தளர்த்தி வெளியேற்ற உதவுகிறது.. தொண்டையின் பின்புறத்தில் இருமலை தூண்டும் வலிமிகுந்த கூச்ச உணர்வை இஞ்சி கட்டுப்படுத்தவும் செய்யும்.
ஓமவள்ளி இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். இதனால் ஜலதோஷம், தலைவலி நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் தீரும். அதிகப்படியான கபம் பிரச்சனை இருப்பவர்கள், ஓமவள்ளி இலையை அரைத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
ஓமவள்ளி இலையை தண்ணீரில் சேர்த்து சுடச்சுட ஆவி பிடித்தாலும் தீர்வு கிடைக்கும். அல்லது இந்த ஓமவள்ளி இலையை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, சிறிது பனகற்கண்டு சேர்த்து குடித்து வந்தாலும் நன்மை பயக்கும். இந்த இலையின் சாறு எடுத்து, சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சளி, இருமல் பிரச்சனை தீரும்.. மார்பு சளி கட்டுக்குள் வரும். தலைவலிக்கு இலையைக் கசக்கித் தலையில் தடவலாம்.
0
Leave a Reply