25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


அரசு பேருந்துகளில் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்? பயணிகளுக்கு அறிவுறுத்தல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு பேருந்துகளில் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்? பயணிகளுக்கு அறிவுறுத்தல்.

அரசுப் பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்படுத்தும்போது, சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் எனப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்துகளில் ஸ்பீக்கர் போன் மூலம் பேசுவது, அதிக ஒலியுடன் வீடியோக்கள் பார்ப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும், இயர்போன் அல்லது ஹெட்போன் பயன்படுத்தவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேருந்துகளில் ஓட்டுநர்கள் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கவிடக் கூடாது என்றும், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் அறிவிப்புச் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல் ராஜ் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பொதுப் போக்குவரத்தில் அனைவருக்கும் வசதியான பயணச் சூழலை உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News