விநாயகர் வழிபாட்டில் அருகம்புல்லுக்கு தனி இடம் உண்டு.
கணபதியை வணங்கி ஒரு செயலை செய்யத் தொடங்கினால், அச்செயல் வெற்றியாக முடியும். அதற்காகவே நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்குகிறோம். உலகில் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவரே விநாயகப் பெருமான்தான். வேத வியாசர் மகாபாரதத்தை சொல்லச்சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதியவர் பிள்ளையார்..பிள்ளையார் முன் நின்று அவரை வணங்கி, தலையில்3 முறை குட்டி, காதுகளைப் பிடித்தபடி தோப்புக் கரணம் போட்டு வணங்க வேண்டும். தோப்புக் கரணம் போடுவதற்கு ஒரு காரணமும் உண்டு. மகாவிஷ்ணுவின் ஸ்ரீ சக்கரத்தை பிடுங்கிக் கொண்டு அதை வாயில் போட்டுக் கொண்டார் விநாயகர். பலம் பொருந்திய விநாயகரிடம் இருந்த சக்கரத்தை மீட்க என்னன்னவோ முயன்றும் திருமாலுக்கு வெற்றி கிட்டவில்லை.இறுதியில் மகாவிஷ்ணு தோப்புக் கரணம் போட, அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார் விநாயகர். எதிர்பார்த்தது போலவே வாயில் இருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. மகாவிஷ்ணு சக்கரத்தை எடுத்துக் கொண்டார். இதைப்போலவே நாமும் தோப்புக் கரணம் போட்டு வழிபட்டால் வேண்டிய வளங்களை விநாயகர் தருவார் என்பது நம்பிக்கை.
விநாயகர் வழிபாட்டில் அருகம்புல்லுக்கு தனி இடம் உண்டு. இதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஒருமுறை அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கினார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன், மிக அதிகமாக அனலைக் கக்கினான். அந்த சூட்டைத் தணிக்க அருகம்புல்லை விழுங்கினார் விநாயகர். உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல், இதன் மூலம் விநாயகர் வழிபாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றது. பூவை விட, அருகம்புல் வைத்து பிள்ளையாரை வழிபடலாம்.
முற்காலங்களில் சித்தர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமான மலை பகுதிகளில் வசித்து வந்தார்கள் மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் இலவசமாக அளித்து வந்தார்கள்.ஊருக்கு மாதம் இரண்டு முறை வந்து மக்களோடு தங்கி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் தந்தார்கள். பௌர்ணமி அமாவாசை அடுத்து வந்த நான்காம் நாள் அதாவது சதுர் திதியில் ஊருக்கு வருவது வழக்கமாக இருந்தது. மக்கள் மூன்றாம் பிறையை பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள் ஏனெனில் அடுத்த நாள் சித்தர்கள் ஊருக்கும் வரும் நாள் என்பதால்.சித்தர்கள் நினைவாகவே உருவாக்கப்பட்ட கடவுள்தான் விநாயகர். அதனால்தான் சித்தர் விநாயகர்- சித்தி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இன்று உள்ளது போல் நாள்காட்டி எல்லாம் அன்று இல்லை நிலவை வைத்தே நாளை கணித்தார்கள்.சித்தர்கள் ஊருக்கு வந்து அரச மர அடியில் அமர்ந்து மக்களை சந்தித்தனர். நீர் தேவையை பூர்த்தி செய்ய அம்மாதிரி அரசு மரங்களுக்கு அருகில் குளங்கள் வெட்டப்பட்டன.அரச மர அடியில் மக்களை வழிநடத்திய தால் இவர்கள் அரசர்கள் என அழைக்கப்பட்டனர். அரச மர அடியில் ஆட்சி செய்ததால் அரசாட்சி அரசாங்கம் என்ற சொற்கள் இன்றும் உள்ளது.அருகம்புல் போன்ற புல்களை கொண்டு வைத்தியம் பார்த்த சித்தர்கள் புல்லையார் என்று அழைக்கப்பட்டு அதுவே பின்பு
பிள்ளையார் ஆனது.
0
Leave a Reply