ஐஸ்லாந்து வாள் சண்டை தொடரில் தங்கம் வென்றார் பவானி தேவி.
ஐஸ்லாந்தின் ரேய்ஜவிக் நகரில் சர்வதேச வாள் சண்டை கூட்டமைப்பு சார்பில் ‘டூர்னோய் சாட்டிலைட்’ வாள் சண்டை தொடர் நடைபெற்றது. இதில் 13 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பெண்களுக்கான சாப்ரே பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார்.
அரையிறுதியில் துருக்கியின் யுசெல் எமினேவை எதிர்கொண்ட பவானி தேவி, 15-12 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் லிதுவேனியாவின் ஜியாத்ரே ராஸ்கட்டை 15-7 என்ற கணக்கில் வீழ்த்தி, பவானி தேவி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
கடந்த 2017-ம் ஆண்டிலும் இதே ‘டூர்னோய் சாட்டிலைட்’ தொடரில் பவானி தேவி தங்கம் வென்றிருந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தத் தொடரில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், தனிநபர் பிரிவில் இந்தத் தொடரில் அவர் வென்றுள்ள 8-வது பதக்கம் இதுவாகும். இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை பவானி தேவி வென்றுள்ளார்.
0
Leave a Reply