உடலில் இயற்கையான முறையில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க ..
இரும்பு, கால்சியம், நார்ச்சத்து நிறைந்த மாதுளை ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.
இரும்பு சத்துக்களை அதிகரிக்கும் தன்மை கொண்ட பெர்ரி பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை உடலிலுள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை வைட்டமின் சி சத்துக்களின் ஆதாரமாக உள்ளது. இவை இரும்பு சத்துக்கள் உறிஞ்சுவதை உறுதி செய்கிறது.
இரும்பு சத்து, வைட்டமின் சி நிறைந்திருக்கும் ஆப்பிள் பழங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதுடன், ரத்தத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பச்சை நிற காய்கறியாக இருந்து வரும் ப்ரோக்கோலி இரும்பு சத்து, வைட்டமின் சி, போலேட் நிறைந்து காணப்படுவதுடன் ஹீமோகுளோபின் உற்பத்தியைஅதிகரிக்கிறது.
இரும்பு சத்து, போலிக் அமிலம், பொட்டாசியம், நார்சத்து நிறைந்த காணப்படும் பீட்ரூட் ரத்த அளவை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
இரும்பு சத்துக்களின் சிறந்த ஆதாரமாக இருந்து வரும் பசலை கீரை, ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
0
Leave a Reply