துணிகளை ஒவ்வொரு முறையும் சலவை செய்த பிறகு புதிது போலவே காட்சியளிக்க டிப்ஸ்.
ஆடைகளை வாஷிங்மெஷினில் போடுவதற்கு முன்பாக உள்பக்கத்தை வெளியே எடுக்கவும். குறிப்பாக உங்கள் ஆடையில் பிரிண்டிங் டிசைன் அல்லது ஏதேனும் படங்கள் இருந்தால் அவை சேதமடைவதை தவிர்க்க இதுபோல உள்பக்கமாக எடுத்து சலவை செய்வது பலன் தரும்.அழுக்கு நிறைந்த ஆடைகள் மற்றும் கறை படிந்த ஆடைகள் போன்றவற்றை சலவை செய்யும் முன்பாக தனி ஒரு பக்கெட்டில் நீண்ட நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். துணிகளை உள்ளே ஊறவைக்கும் தொழில்நுட்பம் உங்கள் வாஷிங் மெஷின் நிலை இருந்தால் தனியாக ஊற வைக்க வேண்டியதில்லை.
சரியான சலவைத் தூளை பயன்படுத்த வேண்டும். மிகுதியாக பயன்படுத்தினால், உங்கள் ஆடைகளின் தரம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. எத்தனை துணிகளை எடுத்து உள்ளீர்கள் என்பதை கணக்கு செய்து அதற்கு எவ்வளவு செலவை தூள் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு சேர்க்கவும்.ஓரிருமுறை தொடர்ந்து வாஷிங் மெஷின் பயன்படுத்திய பிறகு அதில் அழுக்குகள் சேர்ந்து கொள்ள வாய்ப்பு உண்டு. உங்கள் வாஷிங் மெஷின் உள்ள ட்ரம் மற்றும் டப்பை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
ஒரே சமயத்தில் அளவுக்கு அதிகமான துணிகளை அள்ளி வாஷிங் மிஷினில் திணித்து விடக்கூடாது. இயந்திரத்தின் திறன் என்ன மற்றும் அதை பயன்படுத்தும் விதிமுறைகள் என்ன என்பதை பொறுத்து அதை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.நீங்கள் எந்த வகை ஆடைகளை சலவை செய்ய இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து, வாஷிங் மெஷினில் செட்டிங்ஸ் மாற்றம் செய்ய வேண்டும். சாதாரண காட்டன் ஆடைகளுக்கும், மிகுந்த கனமுடைய மெத்தை விரிப்புகளுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் கரைகளை அகற்றுவதற்கு நாம் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், அதில் உள்ள பாக்டீரியா மற்றும் இதர நோய்க்கிருமிகளை அகற்றுவதற்கும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை சலவை செய்யும் ஆடைகள், புதிது போல தோன்ற மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்..
0
Leave a Reply