25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 28, 2025

அனைத்துத் துறை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (26.07.2025) அனைத்துத் துறை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில்,  மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் கேட்டறிந்து பல்வேறு துறை சார்ந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நாட்களுக்குள் தீர்வு காணுவதற்கு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.  முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.மேலும், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பாக அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் விரைந்து முடித்து தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மினி பஸ் திட்டத்தின் செயல்பாடுகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மக்களைத்  தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம்  மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு  வழங்கப்படும்  உதவிகள், ஆலோசனைகள், சந்தை வாய்ப்புகள், நிதி உதவி, மற்றும் பிற தொழில் நுட்ப உதவிகள்  வழங்குவது குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அறிவியல் பூங்கா அமைக்கும் திட்டப்பணிகள் குறித்தும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், தொழிலாளர் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் நல வாரியம் குறித்தும், நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.வைகை ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு  பேரூராட்சிகளுக்கான ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து நடைபெற்று வரும் திட்டப் பணிகளில் அதிக கவனம் செலுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

Jul 28, 2025

அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நிதி ஆதரவுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மிகவும் வறிய நிலையில் உள்ள  குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின்  பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை  மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல்,  பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள்.  இந்த அறிவிப்பிற்கிணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ் நாடு அரசால் வழங்கப்படும்.இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்:        1. ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து. மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)கீழ்க்காணும் ஆவணங்களுடன்,  “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற மாவட்டங்களில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர் / மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம். .1. குடும்ப அட்டையின் நகல்2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.5. பெற்றோரின் இறப்புச்சான்று நகல். உள்ளிட்டவற்றை மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 28, 2025

உங்களுடன் ஸ்டாலின்” இதுவரை நடைபெற்ற 46 முகாம்களில் மொத்தம் 11,145 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. இம்முகாமானது கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.மேலும், இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.உங்களுடன் ஸ்டாலின்  முகாமானது 15.07.2025 முதல் 25.07.2025 வரை நடைபெற்ற 46 முகாம்களில் மொத்தம் 11,145 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில்  இதுவரை 171 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி 10,537 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், இதர மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்தார்.

Jul 28, 2025

திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவை  (28.07.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப.,அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில்  திருஆடிபூரத்  திருத்தேரோட்டம்  ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆண்டாள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆடிப்பூரத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடிப்பூரத்தேரோட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திருத்தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார்.திருத்தேரானது கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் வீதி உலா வந்தது.ஆடிப்பூரத்  தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தது. காவல்துறையின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றங்களைத் தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், திருவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.தங்கம் ரவிக்கண்ணன், திருக்கோவில் செயல் அலுவலர் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Jul 26, 2025

முன்னாள் படைவீரர்கள் ,அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01.08.2025 அன்று நடைபெறவுள்ளது .

 விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01.08.2025 அன்று  பிற்பகல் 03.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.   எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள்/ அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினர் மேற்படி சிறப்பு குறைதீர்க்கும் நாளன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து தங்களின் குறைகள் பற்றிய விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 26, 2025

நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு 31.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .

விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தலில் போட்டியிடமால் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு 31.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் 650 பேர் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12 ஆயிரத்து 913 பேர் கிராம ஊராட்சி ஒன்றியங்களிலும், 388 பேர் ஊராட்சி ஒன்றியங்களிலும், 37 பேர் மாவட்ட ஊராட்சிகளிலும் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் மாநகராட்சி / நகராட்சி/ பேரூராட்சி ஆகியவற்றிற்கான வார்டு உறுப்பினர் பதவிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமண உறுப்பினர்களாக நியமிப்பதற்கான விண்ணப்பங்களை https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சிக்கு https://.tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in  என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.       எனவே, தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இது நாள் வரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வசித்து வரும் பேரூராட்சி எல்லைக்குள் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல்அலுவலரிடமும், நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் வருகிற 31.07.2025 அன்று மாலை 3.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 26, 2025

அச்சங்குளம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அச்சங்குளம் ஊராட்சியில்  (24.07.2025) விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Jul 26, 2025

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர்  மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  (25.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்  பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, நடைபெற்றுவரும் திடக்கழிவு மேலாண்மையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அருகில் சிப்காட் அமையவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, சிப்காட் அமைப்பதற்கான முன்னேற்றப்பணிகள், திட்ட செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்றிந்தார்.பின்னர், அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், விதை உற்பத்தி மையம், விதை சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு கிடங்கினை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு கால்நடைகள் வளர்த்தல் விதம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  கேட்டறிந்து  ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, காரியாபட்டி வட்டம் தோணுகால் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு மின்சாரத் துறையில் பெயர் மாற்றம் செய்வதற்கு மனு அளித்த விண்ணப்பதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து, மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்த ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும்,  தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்பு, பழக்கன்றுகள் தொகுப்பு மானியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர். 

Jul 26, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், தோணுகால் ஊராட்சியில் (25.07.2025) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.  இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அந்த வகையில் (25.07.2025) அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செட்டிக்குறிச்சி சமுதாயக்கூடத்திலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கே.செட்டிக்குளம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் சமுதாயக்கூடத்திலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஆண்டியேந்தல் ஊராட்சி   ருகிலும், சிவகாசி மாநகராட்சி வார்டு எண் 6-ல் சூர்யா மஹாலிலும், இராஜபாளையம் நகராட்சி வார்டு எண்-5ல் என்.ஆர்.கே.திருமண மஹாலிலும்,அதன்படி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த நகலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், வேளாண்மைத்துறையின் கீழ், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தில் துவரை விதைகள் 20 கிலோ 50 சதவீத மானியத்திலும், பருத்தி உற்பத்தி பெருக்கு திட்டத்தின் கீழ், பருத்தி நுண்ணூட்ட உரம் 12.5 கிலோ 75 சதவீத மானியத்திலும் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ், காய்கறிகள் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்று விதைகள் தொகுப்பு 100 சதவீத மானியத்தில் 2 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த சிறப்பு முகாமானது, 29.07.2025 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், காரிச்சேரி ஊராட்சி நடுநிலைப்பள்ளி மத்தியசேனையில், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டைப்பட்டி கிராம பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில், இராஜபாளையம் நகராட்சியில், அருள்புத்தூர் கிராம சமுதாயக்கூடத்தில், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், அயன்நத்தம்பட்டி கிராமள முத்தாலம்மன் திருமண மண்டபத்தில், அருப்புக்கோட்டை (நகராட்சி) வார்டு -6ல், தேவாங்கரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காரியாபட்டி (பேரூராட்சி) முகாம் 2-ல், அம்லா திருமண மஹாலில்,30.07.2025- அன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ரோசல்பட்டி முகாம் 1-ல் , சமுதாயக்கூடத்தில், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், நல்லி கிராமம், அஸ்வின் திருமண மஹாலில்,  வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தாயில்பட்டி கிராமம் வார்டு 16-ல், வி.பி.சி. கட்டடத்தில்,  சிவகாசி மாநகராட்சி வார்டு 7-ல் ஆர்.ஆர்.மஹாலில், திருவில்லிபுத்தூர் நராட்சி வார்டு -6ல் முத்துச்சாமி நாடார் திருமண மஹாலில், செட்டியார்பட்டி பேரூராட்சி முகாம் 2-ல் நெல் அரசி வியாபாரி திருமண மஹாலில்,31.07.2025- சிவகாசி மாநகராட்சி, சுக்கிரவார்பட்டி கிராம தொடக்கப்பள்ளியில், திருவில்லிபுத்தூர் ஊராட்சி, பூவாணி கிராமம் வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டபத்தில், இராஜபாளையம் நகராட்சி, புத்தூர் கிராம சமுhயக்கூடத்தில்,  வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி  கிராமம் அழகாபுரி மக்கள் மன்றத்தில், விருதுநகர் (நகராட்சி) வார்டு 6-ல் பெரிய பள்ளி வாசல் திருமண மஹாலில், சாத்தூர் (நகராட்சி) வார்டு 6-ல் ராஜகோபால் திருமண மஹாலிலும், நடைபெறுகிறது.மேலும், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங் களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Jul 25, 2025

சிவகாசி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்   மரு.என்.ஓ.சுகபுத்ரா, , I A S,  அவர்கள்  (24.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெள்ளூர் கிராமத்தில் நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து,  அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும்   உணவின் தரம் குறித்தும், உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு  கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.பின்னர், பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் வரை சுமார் 10 கி.மீ. தூரத்தில் ரூ.120 கோடி மதிப்பில் சுற்றுச்சாலை பணிகள்  மற்றும் பாலங்கள் கட்டப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிப்பதற்கும் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு  திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 81 82 83 84 85 86 87 ... 138 139

AD's



More News