25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Oct 03, 2025

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157 -வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் (02.10.2025)  அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கதர் அங்காடியில் அண்ணல் காந்தியடிகள் 157-வது பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி அண்ணல் காந்தியடிகள் திருவுருவப்படத்திற்கு  மரியாதை செலுத்தினார்கள்.அண்ணல் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்.கதர் விற்பனை நிலையத்தில் கதர் இரகங்கள், பாலியஸ்டர் இரகங்கள், கண் கவர் பட்டு சேலைகள், பெட்ஷீட்கள், போர்வைகள், மெத்தை, தலையணைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள் மற்றும் துண்டு இரகங்கள் தரமான முறையில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.மேலும் அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலக உதவியாளர், ஊர்தி ஓட்டுநர்களுக்கு சீருடை வகைகளும் இவை தவிர அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு 8 தவணைகளில் திருப்பி செலுத்தும் வகையில் தங்களது மாத ஊதிய அளவிற்கு கதர் இரகங்கள் கடனாகப் பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர், பாலியஸ்டர், பட்டுக்கு இரகங்களுக்கு 30 சதவிகிதம்  சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.பொது மக்களும், வாடிக்கையாளர்களும், அலுவலக பெருமக்களும், ஆசிரியர்களும், ஊராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக அளவில் கதர் இரகங்கள் வாங்கி பயன்பெறலாம்.விருதுநகர் மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு ரூ.75.00 இலட்சம்  மதிப்பிலான கதர் துணிகள் விற்பனை செய்து மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தினை பிடித்தது. அதுபோல் 2025-ம் ஆண்டிற்கும் இம்மாவட்டத்திற்கு ரூ.1 கோடி கதர் விற்பனைக்குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு அனைவரும் கதர் மற்றும் பட்டு இரகங்களை காதி கிராப்ட்களில் வாங்கி பயன் பெறுவதுடன் தங்கள் நல் ஆதரவையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, விருதுநகர் இரயில் நிலையம் நுழைவு வாயிலில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில்,  விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பெ.ரா.வெற்றிவேந்தன், மாவட்ட குடிசைத்தொழில் ஆய்வாளர் திரு.தேவராஜ்,  சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வட்டாட்சியர், கதர் வாரிய பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Oct 02, 2025

விருதுநகர் அரசு இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஒகேசனல் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட் கல்லூரியில் மாவட்ட தீயணைப்புத் துறையின் சார்பில் 25.09.2025 அன்று தீ பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அரசு இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஒகேசனல்; ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட் கல்லூரியில் மாவட்ட தீயணைப்புத் துறையின் சார்பில் 25.09.2025 அன்று தீ பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த ஒத்திகை பயிற்சியில் பேரிடர் காலங்கள் மற்றும் விபத்துக்களில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களைக் கொண்டு எவ்வாறு பணிபுரிந்து வருகின்றோம் என்றும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும், மீட்கப்பட்ட அவர்களை எவ்வாறு தூக்கி சென்று ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், தீ விபத்தின் வகைகள் குறித்தும், அதனை ஆரம்ப நிலையில் தடுக்கும் முறைகள் குறித்தும், பெரும் தீ விபத்துக்கள் மற்றும் ஆயில் தீ விபத்துக்களை எவ்வாறு தீயணைப்பு ஊர்திகளை கொண்டு எளிதில் அணைக்கலாம் எனவும் விளக்க உரை மற்றும் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.மேலும், அவசர கால மீட்பு ஊர்தியில் உள்ள மீட்பு கருவிகளான மகிட்டா ஷா (அ) பவர் ஷா கட்டர் ரூ ஸ்பிரிட்டர், அயன் கட்டர், கான்கிரீட் கட்டர், ஹைட்ராலிக் கட்டர் அன்டு ஸ்பிரட்டர், மேனுவல் கட்டர், ஹைட்ராலிக் ஜாக்கி, ஏர் லிப்டிங் பேக், டெலஸ்கோபி லேடார், அஸ்காலைட், டோர் ஓப்பனர், மூச்சுக்கருவி, பி.பி. சூட், மிதவை படகு(இரப்பர் படகு), தீயணைப்பான்கள் போன்ற செயல்படும் விதங்கள் பற்றியும்,விபத்தின் போது பாதிக்கப்பட்ட நபர்களை மீட்க பயன்படுத்தும் இரண்டு கை முறை, மூன்று கை முறை, நான்கு கை முறை, உப்பு மூட்டை முறை, முதுகுக்குப் பின் முதுகு வைத்து தூக்குதல், குழந்தை தூக்குதல் முறை, உட்காரும் சேர் மூலம் மீட்டல், போர்வை மூலம் மீட்டல், தீயணைப்பாளர் தூக்கி போன்ற மீட்பு முறைகள் பற்றியும் செய்து காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி அலுவலர்(தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை) திரு.பாலமுருகன், கல்லூரி தலைவர் திரு.டிக்காட் ஜாக்சன், பேராசிரியர் திரு.சரவணன், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

Oct 02, 2025

திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு .

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்  வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, I A S., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, திருவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம், சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில்   நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 8 ஆவது கட்டமாக நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை, நேரில் சென்று பயனாளிகளின் விவரங்கள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு பசுமைத் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரும் நாற்றங்கால் நர்சரி பூங்காவினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்நிகழ்வின் போது, திட்ட இயக்குநர் மாவட்ட (ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 01, 2025

இராஜபாளையம் வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்  வளர்ச்சித் திட்டப்பணிகள்  மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, I A S., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சம்மந்தபுரம் கிராமத்தில்  கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம்  மானியத்தில்  வீடுகட்டும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளியிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.          மேலும், இராஜபாளையம் வட்டார இயக்க மேலாண்மை அலகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனையகமான மதி பல்பொருள் அங்காடியினை நேரில் சென்று பார்வையிட்டு, சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண் தொழில் முனைவோர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு திட்டத்தின் கீழ் தலா ஒரு இலட்சம் வீதம் 3 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப, அவர்கள் மற்றும்  மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.          இந்நிகழ்வின் போது, திட்ட இயக்குனர் மாவட்ட (ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்)      திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சீர்மரபினர் நலவாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, இராஜாபாளையம் வட்டாட்சியர் திரு.ராஜீவ் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 30, 2025

ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 16 குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், விஜயரெங்காபுரம் ஊராட்சி மேலகோதை நாச்சியார்புரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த  16 குடும்பங்கள்  ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இணைய வழிபட்டா கிடைக்கப்பெறாதவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக  இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்  என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின்  கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படுகிறது.  மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மட்டுமே கடந்த ஆகஸ்ட் 2025 வரை 13,191 பயனாளிகளுக்கு இலவச இணைய வழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக வெம்பக்கோட்டை வட்டம், மேலகோதை நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 16 குடும்பங்கள்  ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இந்த இடங்களுக்கான இணைய வழிபட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டாக்களை வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து   16 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்கள் நேரில் சென்று வழங்கினார்.எங்களுக்கு இந்த இடத்திற்கான ஒப்படை ஆணைகள்  வழங்கப்பட்டிருந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் இணைய வழியிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே எங்களைத் தேடி வந்து வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் எங்களுக்கு இந்த இடத்திற்கான அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளதால், நாங்கள் எந்த வித தயக்கமின்றி எங்களுக்கான இடங்களில் வீடுகள் கட்டி குடியேற முடியும். எங்களுடைய பலவருட பயத்தையும், பதட்டத்தையும் எங்களுக்கு இந்த பட்டாக்கள் வழங்கியதன் மூலம் தமிழ்நாடு அரசு மகிழ்ச்சியாக மாற்றியிருக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.பாலாஜி, வட்டாட்சியர் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 30, 2025

சர்வதேச காது கேளாதோர் வாரம் -2025 அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை  சார்பில், 23.09.2025 முதல் 29.09.2025 வரை சர்வதேச காது கேளாதோர் வாரம் -2025 அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.காது கேளாதோர் மற்றும் சைகை மொழி வாரமாக 23.09.2025 முதல் 29.09.2025 வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, சைகை மொழியின் முக்கியத்துவம் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அரசு சேவைகளை பெறுவதை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு கூட்டம், விழிப்புணர்வு பேரணி, சிறப்பு இல்லங்கள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும், 23.09.2025 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் நீல நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சைகை மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதன் தொடர்ச்சியாக  சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு சைகை மொழி குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம் வரை  சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இப்பேரணியில், தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்கள், செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், செவித்திறன் குறையுடைய பள்ளிக் குழந்தைகள், செவித்திறன் குறையுடைய சங்க பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் சங்க பிரிதிநிகள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர்   கலந்து கொண்டு பதாகைகளை ஏந்திவிழிப்புணர்வுஏற்படுத்தினர்.இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில்வேல், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 30, 2025

கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய மாவட்ட அளவிலான எச்.ஐ.வி./ எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மூலம்  கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய மாவட்ட அளவிலான  எச்.ஐ.வி. / எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (29.09.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மூலம், மாவட்டத்தில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சமூகத்தில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமலும், ஒதுக்காமலும், சக மனிதர்களை போன்று அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும்,  நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த விழிப்புணர்வு வாகனம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று கரகாட்டம், பறை இசை, ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் மூலம் எச்.ஐ.வி. / எய்ட்ஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட மேலாளர்(எய்ட்ஸ் கட்டுப்பாடு), மேற்பார்வையாளர்கள், கோடாங்கி கலைக்குழு மற்றும் வெண்மணி கிராமிய கலைக்குழுவினர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 30, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தலைமையில்  (29.09.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  பின்னர், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில், திறன் பயிற்சி பெற்ற 36 திருநங்கையர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு ஒரு நபருக்கு ரூ.50,000 வீதம் 36 நபர்களுக்கு மொத்தம் ரூ.18 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 30, 2025

கல்லூரி மாணவ, மாணவியரிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.  

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (29.09.2025) உலக சுற்றுலா தினம்- 2025  முன்னிட்டு இவ்வாண்டிற்கான கருப்பொருளான "சுற்றுலாவும் நிலையான மாற்றமும்" (Tourism And Sustaintable Transformation ) என்ற கருத்துருவின் அடிப்படையில் கல்லூரி மாணவ, மாணவியரிடையே நடைபெற்ற  கட்டுரை, குறும்படம்(Short flim), வினாடிவினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் வழங்கினார்.                     சுற்றுலாத்துறையின் சார்பாக, விருதுநகர் சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி  நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர் மற்றும் வி.வி.வி. கல்லூரி மற்றும் விருதுநகர் இந்து நாடார் செந்தில்குமாரா நாடார் கல்லூரி, கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன் கோவில் மற்றும் எஸ்.எப்.ஆர்.கல்லூரி சிவகாசி வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை இணைந்து கல்லூரி மாணவ/மாணவர்களுக்கு “சுற்றுலாவும் நிலையான மாற்றமும்” என்ற  கருப்பொருளின் அடிப்படையில் 26.09.2025 அன்று சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி  நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி மற்றும் சாத்தூர் கல்லூரியில் கட்டுரைப்போட்டி, குறும்படப் போட்டி மற்றும் வினாடி-வினாப் போட்டிகள் நடத்தப்பட்டது.                        மேலும், இந்நிகழ்வின் தொடர்ச்சியாக 27.09.2025 அன்று முக்கிய சுற்றுலாத்தளமானஸ்ரீ நாச்சியார் ஆண்டாள் திருக்கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூரில் சுற்றுலாத்துறையின் சார்பில், சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.அதனைத்தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,சுற்றுலா அலுவலர் திரு. ப.முனியப்பன்(மு.கூ.பொ), அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ / மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.             

Sep 30, 2025

மாநில அளவிலான சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கான விருது பெற விண்ணப்பிக்கின்ற  கால அளவு 30.09.2025 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு தொடர்பாக, சட்டப்பேரவையில்  சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் 2021-2022 ஆம் ஆண்டிற்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதில் மாநில அளவிலான சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கு விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் உலக சுற்றுலாத்தினத்தன்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சுற்றுலா பயண முகவர்கள், விமான நிறுவனங்கள் தங்கும் விடுதிகள் உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு 2025ம் ஆண்டிற்கான மொத்தம் 45 விருதுகள் 17 வகைப்பாடுகளில் வழங்கப்படவுள்ளது.விருது வழங்கப்படும் வகைப்பாடுகள், சிறந்த உள்வரும் பயண முகவர், சிறந்த உள்நாட்டு பயண முகவர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான நிறுவன பங்குதாரர், சிறந்த தங்கும் விடுதி, சிறந்த உணவகம், சிறந்த (Niche) சுற்றுலாத்தலம், சிறந்த சாகச சுற்றுலா மற்றும் கேம்பிங் சைட் அமைப்பாளர்கள், சிறந்த (MICE) சுற்றுலா அமைப்பாளர்கள், சிறந்த சமூக ஊடகவியலாளர் (Special Media Influencer), சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சிறந்த சுற்றுலா விளம்பரங்கள், சிறந்த சுற்றுலா மேம்பாட்டு வெளியீட்டுகள், சிறந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சார்ந்த கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட நிறுவனங்களிமிருந்து விருதுநகர் மாவட்டத்தில்  உள்ள சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும், விண்ணப்பங்களை www.tntourismawardscom என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக விண்ணப்பிக்க 30.09.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் கூடுதல் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலர் (மு.கூ.பொ) விருதுநகர் அவர்களை 73977-15688 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சித் தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 82 83 84 85 86 87 88 ... 152 153

AD's



More News