நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு 31.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .
விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தலில் போட்டியிடமால் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு 31.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் 650 பேர் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12 ஆயிரத்து 913 பேர் கிராம ஊராட்சி ஒன்றியங்களிலும், 388 பேர் ஊராட்சி ஒன்றியங்களிலும், 37 பேர் மாவட்ட ஊராட்சிகளிலும் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மாநகராட்சி / நகராட்சி/ பேரூராட்சி ஆகியவற்றிற்கான வார்டு உறுப்பினர் பதவிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமண உறுப்பினர்களாக நியமிப்பதற்கான விண்ணப்பங்களை https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சிக்கு https://.tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே, தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இது நாள் வரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வசித்து வரும் பேரூராட்சி எல்லைக்குள் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல்அலுவலரிடமும், நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் வருகிற 31.07.2025 அன்று மாலை 3.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply