மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் இலக்கியத் திறனறிவு தேர்வுக்கான உண்டு உறைவிட, சிறப்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம்.பொறியியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் இலக்கியத் திறனறிவு தேர்வுக்கான உண்டு உறைவிட, சிறப்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (01.10.2024) நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களிடையே போட்டித்தேர்வின் முக்கியத்துவம், பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து உரையாற்றினார்.
பள்ளி மாணவ மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு" நடத்தப்பட்டு வருகிறது.2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500ஃ- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழில் ஆர்வம் மிக்க 140 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் இலக்கிய திறனறித் தேர்விற்கு தயார் செய்யும் வகையில், கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம்.பொறியியல் கல்லூரியில், உண்டு, உறைவிட பயிற்சி முகாம் 30.09.2024 முதல் 17.10.2024 வரை நடைபெறுகிறது.அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உண்டு, உறைவிட பயிற்சி முகாமினை பார்வையிட்டு, மாணவர்களிடையே போட்டித் தேர்வின் முக்கியத்துவம், பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி ஊக்கப்படுத்தினார்.
மேலும், போட்டி தேர்வில் பங்கு பெறுவது என்பது இளம் வயதிலேயே மாணவர்கள் தங்கள் திறனை அறிந்து கொள்ளவும், அனைத்து போட்டி தேர்வுகளில் பயமின்றி பங்கு பெற்று வெற்றி பெறவும் முடியும். வெற்றி பெறுவதில் மூலம் கிடைக்கும் உதவி தொகை கல்வி செலவிற்கும் உதவுவதோடு குடும்பத்தின் நிதிசுமையை குறைக்கும். இதுபோன்று தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர், உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply