இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு மல்யுத்தத்தில் பதக்கம் உறுதி.
ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டி நடக்கின்றன. பெண்களுக்கான பிரீஸ்டைல் 50 கிலோ பிரிவு போட்டி நடந்தது. வழக்கமாக 53 கிலோ பிரிவில் களமிறங்கும் இந்தியாவின் வினேஷ் போகத், முதன் முறையாக இப்பிரிவில் பங்கேற்றார். முதல் சுற்றில் நடப்பு ஒலிம்பிக், நான்குமுறை உலக சாம்பியன், உலகின் நம்பர் 1 வீராங்கனை, ஐப்பானின் யுகசாகியை எதிர்கொண்டார்.
முதல் 3 நிமிட பிரியடில் வினேஷ் 0-1 என பின் தங்கினார். இரண்டாவது பீரியடிலும் இவர் 0-2 என்ற நிலைக்கு சென்றார். போட்டி முடிய 9 வினாடி இருந்த போது, சிறப்பாக செயல்பட்ட வினேஷ், கசாகியை கீழே தள்ள 2 புள்ளி கிடைத்தது. இதை எதிர்த்து கசாகி அப்பீல் செய்த போதும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் வினேஷ் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, காலிறுதிக்கு முன்னேறினார்.
ஐரோப்பிய சாம்பியன் 2018 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற, உக்ரைனின் ஆக்சன லிவாச்சை சந்தித்தார். கீயுபாவின் லோபசை 5-0 என வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இதையடுத்து ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார். வினேஷ் போகத்.
0
Leave a Reply