ஸ்வீட் கார்ன் வடை.
தேவையான பொருட்கள்-
1கப் ஸ்வீட் கார்ன்,
1/4 கப் வடை பருப்பு,
5 வற்றல் மிளகாய்,
1/2 டீஸ்பூன் சோம்பு,
கறிவேப்பிலை,
சிறிய துண்டுஇஞ்சி,
தேவையான அளவுஉப்பு,
1/2 லிட்டர் எண்ணெய் பொரிப்பதற்கு.
செய்முறை -
ஸ்வீட் கானில் உள்ள சோளத்தை தனியாக பிரித்து எடுக்கவும்.
பிரித்து எடுத்த சோளத்துடன், ஒரு மணி நேரம் ஊற வைத்த, வடை பருப்புகலந்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் வற்றல் மிளகாய், சோம்பு, இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து அரைத்து,கான் வடை மாவில் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவைத்துக்கொள்ளவும்.
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும்,வடையை தட்டி போடவும்.
நன்கு வெந்து பொன்னிறமானதும் எடுத்தால் ஸ்வீட் கான் வடை தயார்.
சுவையான, சத்தான, கிரிஸ்பியான ஸ்வீட் கான் வடை சுவைக்கத்தயார்.ஸ்வீட்கான் வடை ஒரு நல்ல மாலை நேர ஸ்நாக்ஸ்.
0
Leave a Reply