25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால்..

வாந்தி, வயிற்றுப்போக்கினால் நீரிழப்பு ஏற்பட்டால் ORS பாக்கெட்டுகளைப் பயன்படுத்துங்கள்.

இதில் போலிகளும் விற்கப்படுகின்றன. எனவே, பல வண்ணங்களில் விற்கப்படும் பானங்கள் வாங்குவதில் கவனமாக இருங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி, தரமான பாக்கெட்டுகளையே வாங்குங்கள்.

நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகள்-

அதிக தாகம் எடுப்பது, நாவறட்சி, சிறுநீர் குறைவாகப் போவது, அடர்ந்த மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போவது, தலைவலி, தசைப்பிடிப்பு போன்றவை உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை உணர்த்தும்.

வீட்டிலேயே தயாரிக்கலாம்

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, ஒரு லிட்டர் ஒ.ஆர்.எஸ். கரைசலில் சர்க்கரை 13.5 கிராம், சோடியம் குளோரைடு 2.6 கிராம், பொட்டாசியம் குளோரைடு 1.5 கிராம், சோடியம் சிட்ரேட் 2.9 கிராம் சேர்க்க வேண்டும். இவற்றைக் கொதிக்க வைத்து, பின்பு ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் ஆறு டீஸ்பூன் சர்க்கரையும் அரை டீஸ்பூன் உப்பும் சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்கு கலக்கிக் கரையச் செய்தால் ஓ.ஆர்.எஸ் கரைசல் தயார்.

ஒ.ஆர்.எஸ். கரைசல் மிதமான நீரிழப்பை மட்டுமே சரி செய்யும். கடுமையான நீரிழப்புக்கு மருத்துவச் சிகிச்சை அவசியம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News