'Bread for All'... துபாயின் மனிதநேயம் முதல் ஆடம்பரம் ,, 'A Dubai Invite' வரை!
துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது தொடங்கிய 'Bread for All' திட்டத்தின் மூலம், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் தேவையுள்ளவர்களுக்கு இலவச ரொட்டி வழங்கப்படுகிறது. துபாயில் யாரும் பசியுடன் உறங்கக் கூடாது என்பதே இதன் நோக்கம்.
இதுமட்டுமல்லாமல், Lamborghini, Ferrari போன்ற சூப்பர் கார்களில் ரோந்து செல்லும் போலீசார், Robot Police Officer, உலகின் மிக உயரமான Burj Khalifa, Gold ATM, 24 கேரட் Gold Ice Cream, Floating Villas போன்ற ஆடம்பரங்களாலும் துபாய் உலகை வியக்க வைக்கிறது.
அதேநேரத்தில், அழுக்கான காரை பொதுஇடத்தில் நிறுத்துதல், அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது, மெட்ரோவில் சாப்பிடுதல் அல்லது சூயிங்கம் மெல்லுதல் போன்றவற்றுக்கு கடுமையான விதிமுறைகளும் அமலில் உள்ளன.
மேலும், 'A Dubai Invite' திட்டத்தின் கீழ், ஜூலை 20 முதல் அக்டோபர் 31, 2026 வரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து வரும் குடியிருப்போருக்கு Dh 3,000-க்கும் அதிகமான பயணச் சலுகைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
0
Leave a Reply