25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வேட்டையன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வேட்டையன்.

ரஜினியின் 170வது படமான இதை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் ஏற்கனவே மனசிலாயோ, ஹண்டர் வண்டார் போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன.

வேட்டையன் படத்தின் முதல் 20 நிமிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரின் மாஸ் மொமண்ட்ஸையும் கொண்டாடும்படி உள்ளது.. மொத்தத்தில் வேட்டையன் மாஸ் பிளஸ் கிளாஸ் நிறைந்த மெசேஜ் உள்ள படம். முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி Above average என பதிவிட்டு உள்ளார்.

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா டகுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தின் கதையை முதலில் சூர்யாவுக்கு தான் சொல்லி இருந்தாராம் இயக்குனர் ஞானவேல், ஆனால் இது ரஜினிகாந்துக்கு பொருத்தமாக இருக்கும் என சூர்யா சொன்னதை அடுத்து தான் சூப்பர்ஸ்டாரை வைத்து வேட்டையன் படத்தை எடுத்திருக்கிறார் ஞானவேல்.

வேட்டையனுக்கு பிளாக்பஸ்டர் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஜெயிலர் பட சாதனையை முறியடிக்குமானு தெரியல, ஆனா அத விட ரொம்ப நல்ல படம். ஞானவேல் எங்க ஜெயிக்குறார்னா ரசிகர்களுக்கு மாஸ் மொமண்ட்ஸ படம் பூரா உறுத்தல் இல்லாம தெளிச்சு வெச்சுருக்காரு. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத படம்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News