நாம் கோவிலுக்கு சென்று வந்த புண்ணியம், கடன் கொடுத்தவனை சென்றடையும்.சுவாமிக்கு சமர்பித்த மாலையை நாம் பிரசாதமாக பெற்று கொள்ளலாம், ஆனால் அதை அணிந்து கொள்வது பாவமாகும். வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைப்பது சிறப்பு.சிவன் கோயிலாக இருந்தால், சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து விட்டு செல்ல வேண்டும். பெருமாள் கோயிலாக இருந்தால் உட்காராமல் வீட்டிற்குச் செல்லவேண்டும், லட்சுமி தேவி நம்முடன் வருவதாக ஐதீகம்.
நல்ல ஆற்றல் வர வேண்டுமா? வீட்டை சுத்தமாக வைத்தாலே போதும்.வீட்டுக்குள் வாடிய செடிகளை வைக்க வேண்டாம்.அவை எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.அலுவலகம், வீடு, தோட்டம், பண்ணை போன்ற இடங்களில் உலர்ந்த மரங்கள் இருந்தால் வறுமை உண்டாகும்.துருப்பிடித்த இரும்பு, கிழிந்த ஆடைகள், பழைய துணிகள் இருந்தாலும் வீட்டில் நெகட்டிவ் சக்தி உருவாகும்.வேலை செய்யாத கடிகாரம் இருந்தால் குடும்பத்தில் கடன் பிரச்சனைகள் அதிகரிக்கும்.உடைந்த கண்ணாடி, பிளாஸ்டிக், மண் பானைகள் போன்றவை வீட்டில் இருந்தால் கெட்ட ஆற்றல் சேரும்.
வீட்டில் யாராவது வரும்போது கை கொண்டு கதவைத் திறப்பது நல்லது. கதவை எப்போதும் திறந்து வைப்பது செல்வம் குறையும் என ஜோதிடம், காலை-மாலை சில நேரம் மட்டும் திறந்து வைக்க வேண்டும். வாசல் முன் தினமும் விளக்கு ஏற்றி வைத்தால் கண் திருஷ்டி குறையும். தினமும் கதவை துடைத்து ,மஞ்சள்-குங்குமம் வைப்பது,வாஸ்து குறை நீங்க உதவும்.
நீங்கள் குளிக்கும் போது தண்ணீருடன் சேர்ந்து, சிறுநீர் கழிக்க கூடாது கங்கையின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். குளியல் அறையில் தண்ணீர் வடியும் இடத்தில், முடிகள் தேங்கி இருக்கக் கூடாது.கேது பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். குளியலறையில் இரும்பு பொருட்களான கத்தரிக்கோல், சேவிங் மெஷின் போன்றவை வைக்கலாம், தவறில்லை. ஆனால் அது துருப்பிடிக்கும் வரை வைத்திருக்கக் கூடாது. சனியின் கோபத்திற்கு ஆளாகிர்கள். குளித்து முடித்ததும் bucket,cup போன்றவைகளை கவிழ்ந்து வைக்க வேண்டும்.தண்ணீர் தேக்கி வைக்க கூடாது. தண்ணிர்,குழாயில் சொட்டு சொட்டாக தண்ணீர் வடிந்த வண்ணம் இருக்கக் கூடாது. கடனாவீர்கள் ஜாக்கிரதை. குளிக்கும் பெண்கள்,குளியலறையில் சென்று நெற்றியில் இருக்கும் பொட்டை எடுத்து வைப்பது,வளையல், செயினை கழட்டி வைப்பது என்பது கண்டிப்பாக கூடாது.குளிக்கும் முன் சரி செய்துவிட்டு தான் குளியல் அறைக்கு செல்ல வேண்டும்.
வில்வ இலையைப் பறிக்கும் போது முழுவதுமாக (3 இதழ்களும் சேர்ந்து) காம்புடன் பறிக்க வேண்டும்.தனித்தனி இதழ்களாக பறிக்க கூடாது, பூச்சி அரித்த அல்லது கிழிந்த இலைகளை பூஜைக்குப் பயன்படுத்த கூடாது.வில்வ இலைகள் பறித்த பின்பும் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும்.வில்வ இலையை சமரப்பிக்கும் போது ,அதன் நரம்புகள் சிவ லிங்கத்தின் மேல் படும்படி (தலைகீழாக) வைப்பது மிகவும் விசேஷமானது.ஒருமுறை பயன்படுத்திய வில்வ இலையை தூய்மையான நீரால் கழுவி சுத்தம் செய்து மீண்டும் பூஜைக்குப் பயன்படுத்தலாம்.சிவபெருமானுக்கு மட்டும் இந்த விதி விலக்கு உண்டு.
பொதுவாக பெண்களுக்கு வலது பக்கம் மூக்கு குத்துவது சாஸ்திர ரீதியாகவும், உடல்நல ரீதியாகவும் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில் இடப்பக்கம் மூக்கு குத்துவதுதான் அதிக பலன்களை தருகிறதாம். குறிப்பாக, இடது பக்கத்தில் முக்கு குத்திக் கொள்வதால், பெண்களின் வலது பக்க முளை சிறப்பாக இயங்குகிறது.இடப்பக்கத்தில் குத்தி கொள்வதால், பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளும் சீராக செயல்படுகிறது. மூக்கு குத்தியுள்ள பெண்களுக்கு குறைவான பிரசவ வலியை அனுபவிக்கிறார்களாம். இதனால், குழந்தை சிரமமின்றி எளிதாக பிறக்கும் என்கிறார்கள். அதேபோல மாதவிடாய் பிரச்சனைகளின் அவதியும் குறைகிறதாம்.
பெருமாளுக்கும்பத்மாவதி தாயிருக்கும் திருமணம் முடிந்து, பத்மாவதி தாயார், பெருமிதமாக தனது சீர்வரிசைகளை பெருமாளிடம் காட்டினார். உங்களுக்கு ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் என்றாராம். பெருமாளோ இதில் எனக்குப் பிடித்த கறிவேப்பிலை, கனகாம்பரம் இரண்டு பொருட்கள் இல்லை என்றாராம்.தாய் வீட்டிற்கு சென்று இரு பொருட்களையும் கொண்டு வருகிறேன் என்று தாயார்கூறியுள்ளார். அதற்குப் பெருமாள் சரி, இருட்டுவதற்கு முன் இங்கே வந்து விட வேண்டும் என்றாராம். பிறந்த வீட்டிலிருந்து திரும்பிய தாயார் இருட்டுவதற்கு முன் திருச்சானூர் வரை தான் வர முடிந்தது.ஆகையால்அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. திருமலை பூஜையில் கனகாம்பரமும்படையலில் கறிவேப்பிலையும் இருப்பதில்லை. ஆனால் இன்று வரை பெருமாள் இரவில்திருச்சானூருக்கு சென்று விடிவதற்கு முன் திருமலைக்கு வந்து விடுவதாகஐதீகம்.
வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் குறைந்து, நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வீட்டு வாசலை கழுவி அலங்கரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டு வாசலை சுத்தமாகவும் மங்களகரமாகவும் வைத்துக் கொள்வது. அந்த வீட்டில் வசிக்கும் குடும்ப நபருக்கு சகல சௌபாக்கியம் செல்வ செழிப்பு, நற்பலன்களை அள்ளித் தரும். தலை நிலை வாசலில் மா இலை தோரணம் கட்டுவது நல்ல விசேஷமாகும். இது நேர்மறை ஆற்றலை அதிகரித்து வீட்டுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தரும். வீட்டு வாசலில் உருளியில் தண்ணீர் நிரப்பி அழகான மலர்களை நீரில் போட்டு வைக்க வேண்டும். வீட்டு வாசலில் அரிசி மாவு கொண்டு,அழகான கோலம் போட்டு வைப்பது லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.
மஞ்சள் பொடி விநாயகர் - சகல காரியத்திலும் வெற்றி,வெல்லத்தால் செய்த விநாயகர்- வாழ்க்கையில் வளம் பெருகும்.வெள்ளெருக்கு விநாயகர்- செல்வம் பெருகும்.கல் விநாயகர் - வெற்றிகள் கிடைக்கும்.உப்பு விநாயகர்- எதிரிகள்விலகுவர்.புற்றுமண் விநாயகர் - வியாபார விருத்தி.மண்ணால் செய்த விநாயகர் - உயர் பதவிகள் கிடைக்கும்.குங்கும விநாயகர் -குழந்தையின் கல்வி மேம்படும்.விபூதி விநாயகர் - தீவினை அகலும்.சந்தன விநாயகர் -திருமணத்தடை விலகும்.அருகு விநாயகர் - வழக்குகளில் வெற்றி.சங்கு விநாயகர் -குபேரன் அருள் கிட்டும் .வெற்றிலை விநாயகர்- பிரச்னைகள் மறையும்.அரச இலை விநாயகர்- அரசு அனுகூலம். ஆற்று மண் விநாயகர்- குழந்தைப்பேறு உண்டாகும்.
நாம் சாப்பிடுவதற்கு முன் நாய்க்கு உணவளிக்க வேண்டும் எச்சில் பட்ட கையால் நாய்க்கு உணவளிப்பது தோஷத்தை உண்டாக்கும். நாய்க்கு தொடர்ந்து அன்போடு உணவளிப்பது பெரிய புண்ணிய பலனை தரும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் உள்ள நாய்கள் அடிக்கடி ஊளையிட்டால், அது வரவிருக்கும் அசுப நிகழ்வுகளுக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.