25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

Apr 10, 2026

ஏன் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமைகளில் மற்றவருக்கு பணமோ பொருளோ கொடுக்கக் கூடாது ?

செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பணம் பொருள் மற்றவருக்கு கொடுக்கக் கூடாது.ஏனென்றால் செவ்வாய் கிழமை முருகனுக்கு,. வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு உகந்த நாள். ஆகவே செவ்வாய் ,வெள்ளிக்கிழமைகளில் மற்றவருக்கு பணம் பொருளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.அதிக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். செவ்வாய் ,வெள்ளிக்கிழமைகளில் முருகரையும் லட்சுமியையும் வழிபட்டு வந்தால் ஏட்டில் பணம் சேரும் என்பது சான்றோர் கூற்று .ஆகவே இதை அனைவரும் கடைப்பிடித்தால் நலம் வந்து சேரும்.

Apr 03, 2026

வீட்டில் இதை செய்யாதீர்கள் செல்வம் குறைந்து விடும்.

குரு மற்றும் சகோதரியை பார்க்க செல்லும் பொழுது, வெறுங்கையுடன் செல்லக்கூடாது. தலை வாசலுக்கு நேரே படுக்க கூடாது. வானவில்லை நாம் பிறருக்கு காண்பிக்க கூடாது. இரவுகளில் தூங்கும் முன், ஈர கால்களுடன் உறங்கக்கூடாது வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை உற்றுப் பார்க்கக் கூடாது. கன்று குட்டி கட்டி இருக்கும் கயிறை தாலாட்டக் கூடாது. சாப்பிடும் வேளையை தவிர்த்து பிற நேரங்களில், இடது கைகளால் நாம் தண்ணீர் அருந்தக்கூடாது.

Mar 27, 2026

பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள்.

1- வீட்டில் நிறைய ஊறுகாய் வகைகளை வைத்து இருப்பது குபேர சம்பத்து தரும். 2- கல்லுப்பு, புளி போட்டு வைக்கும் பாத்திரம் காலியாக இருக்க கூடாது. 3- வெள்ளிக்கிழமையில் மாலை 6-7 மணிக்குள் கல்லுப்பு வாங்கி வீட்டில் வைத்தால் பணம் சேரும். 4 - விளக்கேற்றும் போது பின்பக்க கதவை சாத்தி விட்டு ஏற்றினால் ஐஸ்வர்யம் கூடும். 5- முறம், அம்மி, ஆட்டுக்கல், உணவு தானியங்களை மிதிக்கவும் கூடாது தாண்டக்கூடாது. 6- மாலை சாய்வதற்கு ஒரு நாழிகை முன் (6.48-6.00) விளக்கேற்றினால் வீடு செழிக்கும். 7-குழந்தைகளின் உடைகளை மாலை நேரத்திற்கு முன்பே காய வைத்து எடுத்து விட வேண்டும். 8 - காலாட்டுவது வீட்டிற்கு கேடு விளைவிக்கும். 9 - பால், தயிர் ஊசி என்று வரும் இரண்டெழுத்து பொருட்களை இரவில் இரவல்  தரக் கூடாது.

Mar 20, 2026

கோவிலுக்கு செல்ல கடன் வாங்கக்கூடாது.

நாம் கோவிலுக்கு சென்று வந்த புண்ணியம், கடன் கொடுத்தவனை சென்றடையும்.சுவாமிக்கு சமர்பித்த மாலையை நாம் பிரசாதமாக பெற்று கொள்ளலாம், ஆனால் அதை அணிந்து கொள்வது பாவமாகும். வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைப்பது சிறப்பு.சிவன் கோயிலாக இருந்தால், சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து விட்டு செல்ல வேண்டும். பெருமாள் கோயிலாக இருந்தால் உட்காராமல் வீட்டிற்குச் செல்லவேண்டும், லட்சுமி தேவி நம்முடன் வருவதாக ஐதீகம்.

Mar 13, 2026

வீட்டில் இருக்கக் கூடாத  பொருட்கள்.

நல்ல ஆற்றல் வர வேண்டுமா? வீட்டை சுத்தமாக வைத்தாலே போதும்.வீட்டுக்குள் வாடிய செடிகளை வைக்க வேண்டாம்.அவை எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.அலுவலகம், வீடு, தோட்டம், பண்ணை போன்ற இடங்களில் உலர்ந்த மரங்கள் இருந்தால் வறுமை உண்டாகும்.துருப்பிடித்த இரும்பு, கிழிந்த ஆடைகள், பழைய துணிகள் இருந்தாலும் வீட்டில் நெகட்டிவ் சக்தி உருவாகும்.வேலை செய்யாத கடிகாரம் இருந்தால் குடும்பத்தில் கடன் பிரச்சனைகள் அதிகரிக்கும்.உடைந்த கண்ணாடி, பிளாஸ்டிக், மண் பானைகள் போன்றவை வீட்டில் இருந்தால் கெட்ட ஆற்றல் சேரும்.

Mar 06, 2026

தலை நிலை வாசல்:கதவு - எப்போதும் திறந்து வைக்கலாமா?

வீட்டில் யாராவது வரும்போது கை கொண்டு கதவைத் திறப்பது நல்லது. கதவை எப்போதும் திறந்து வைப்பது செல்வம் குறையும் என ஜோதிடம், காலை-மாலை சில நேரம் மட்டும் திறந்து வைக்க வேண்டும். வாசல் முன் தினமும் விளக்கு ஏற்றி வைத்தால் கண் திருஷ்டி குறையும். தினமும் கதவை துடைத்து ,மஞ்சள்-குங்குமம் வைப்பது,வாஸ்து குறை நீங்க உதவும்.

Feb 27, 2026

தினமும் குளிப்போர் கவனத்திற்கு...

நீங்கள் குளிக்கும் போது தண்ணீருடன் சேர்ந்து, சிறுநீர் கழிக்க கூடாது கங்கையின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். குளியல் அறையில் தண்ணீர் வடியும் இடத்தில், முடிகள் தேங்கி இருக்கக் கூடாது.கேது பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். குளியலறையில் இரும்பு பொருட்களான கத்தரிக்கோல், சேவிங் மெஷின் போன்றவை வைக்கலாம், தவறில்லை. ஆனால் அது துருப்பிடிக்கும் வரை வைத்திருக்கக் கூடாது. சனியின் கோபத்திற்கு ஆளாகிர்கள். குளித்து முடித்ததும் bucket,cup போன்றவைகளை கவிழ்ந்து வைக்க வேண்டும்.தண்ணீர் தேக்கி வைக்க கூடாது. தண்ணிர்,குழாயில் சொட்டு சொட்டாக தண்ணீர் வடிந்த வண்ணம் இருக்கக் கூடாது. கடனாவீர்கள் ஜாக்கிரதை. குளிக்கும் பெண்கள்,குளியலறையில் சென்று நெற்றியில் இருக்கும் பொட்டை எடுத்து வைப்பது,வளையல், செயினை கழட்டி வைப்பது என்பது கண்டிப்பாக கூடாது.குளிக்கும் முன் சரி செய்துவிட்டு தான் குளியல் அறைக்கு செல்ல வேண்டும்.

Feb 20, 2026

வில்வ இலையை சிவபெருமானுக்கு எப்படி சமர்ப்பிக்க வேண்டும்.

வில்வ இலையைப் பறிக்கும் போது முழுவதுமாக (3 இதழ்களும் சேர்ந்து) காம்புடன் பறிக்க வேண்டும்.தனித்தனி இதழ்களாக பறிக்க கூடாது, பூச்சி அரித்த அல்லது கிழிந்த இலைகளை பூஜைக்குப் பயன்படுத்த கூடாது.வில்வ இலைகள் பறித்த பின்பும் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும்.வில்வ இலையை சமரப்பிக்கும் போது ,அதன் நரம்புகள் சிவ லிங்கத்தின் மேல் படும்படி (தலைகீழாக) வைப்பது மிகவும் விசேஷமானது.ஒருமுறை பயன்படுத்திய வில்வ இலையை தூய்மையான நீரால் கழுவி சுத்தம் செய்து மீண்டும் பூஜைக்குப் பயன்படுத்தலாம்.சிவபெருமானுக்கு மட்டும் இந்த விதி விலக்கு உண்டு.

Feb 13, 2026

பெண்கள் இடது பக்கம் மூக்கு குத்தி இருந்தால் …

பொதுவாக பெண்களுக்கு வலது பக்கம் மூக்கு குத்துவது சாஸ்திர ரீதியாகவும், உடல்நல ரீதியாகவும் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில் இடப்பக்கம் மூக்கு குத்துவதுதான் அதிக பலன்களை தருகிறதாம். குறிப்பாக, இடது பக்கத்தில் முக்கு குத்திக் கொள்வதால், பெண்களின் வலது பக்க முளை சிறப்பாக இயங்குகிறது.இடப்பக்கத்தில் குத்தி கொள்வதால், பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளும் சீராக செயல்படுகிறது. மூக்கு குத்தியுள்ள பெண்களுக்கு குறைவான பிரசவ வலியை அனுபவிக்கிறார்களாம். இதனால், குழந்தை சிரமமின்றி எளிதாக பிறக்கும் என்கிறார்கள். அதேபோல மாதவிடாய் பிரச்சனைகளின் அவதியும் குறைகிறதாம்.

Feb 06, 2026

தம்பதிகளான பெருமாள் திருப்பதி மலை மீதும், தாயார் ஏன் கீழே உள்ளார்?.

பெருமாளுக்கும்பத்மாவதி தாயிருக்கும் திருமணம் முடிந்து, பத்மாவதி தாயார், பெருமிதமாக தனது சீர்வரிசைகளை பெருமாளிடம் காட்டினார். உங்களுக்கு ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் என்றாராம். பெருமாளோ இதில் எனக்குப் பிடித்த கறிவேப்பிலை, கனகாம்பரம் இரண்டு பொருட்கள் இல்லை என்றாராம்.தாய் வீட்டிற்கு சென்று இரு பொருட்களையும் கொண்டு வருகிறேன் என்று தாயார்கூறியுள்ளார். அதற்குப் பெருமாள் சரி, இருட்டுவதற்கு முன் இங்கே வந்து விட வேண்டும் என்றாராம். பிறந்த வீட்டிலிருந்து திரும்பிய தாயார் இருட்டுவதற்கு முன் திருச்சானூர் வரை தான் வர முடிந்தது.ஆகையால்அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. திருமலை பூஜையில் கனகாம்பரமும்படையலில் கறிவேப்பிலையும் இருப்பதில்லை. ஆனால் இன்று வரை பெருமாள் இரவில்திருச்சானூருக்கு சென்று விடிவதற்கு முன் திருமலைக்கு வந்து விடுவதாகஐதீகம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

AD's



More News