'ஓம் ரீங் வசி வசி என்னும் மந்திரத்தை கண்களை மூடி உதடு அசையாமல் காலையிலும் மாலையிலும் வடகிழக்கு திசையை நோக்கி 108 முறை ஜெபிக்கவேண்டும்.தரையில் விரிப்பின் மேல் அமர்ந்து ஜெபிக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள் ஜெபித்தால் சர்வ வசியம் உண்டாகும் தனியாக ஒரிடத்தில் அமர்ந்து மன ஒருமைபாட்டுடன் அமர்ந்து ஜெபிக்க வேண்டும் பொதுவாக எல்லா மந்திரங்களும் ஜெபித்தஉடனேயே பலன் தருவதில்லை ஒரு லட்சம் முறை உரு ஏற்றிய பின்னரே அவை வேலை செய்யத் தொடங்கும். வசிய மந்திரத்தை ஜெபிக்கும்போது வாயின் வலது பக்கத்தில் ஒரு கிராம்பினை ஒதுக்கி வைத்துகொள்ள வேண்டும்.எக்காரணம் கொண்டும் கடிக்கக்கூடாது ஜெபம் முடிந்ததும் கிராம்பைத் துப்பிலிட வேண்டும் இது வசிய சக்தியை விரைவு படுத்த உதவும்.வசியப் பிரயோகம் செய்தால் கண்னுக்குத் தெரிந்த எதிரிகளும் தெரியாத எதிரிகளும் வசியமாகி விடுவார்கள் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம: வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ ரத்னகரீ சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ"
முதல் சாபம்பெற்றோர்களின் சாபம் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இச்சாபத்திலிருந்து மீள்வதற்கு சண்டிகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது சிறந்த பரிகாரமாகும். பெற்றோர்கள் இட்ட சாபத்தை நீக்கும் படி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.இரண்டாவது சாபம்சுமங்கலிகள் கண்ணீர் மல்க விடும் சாபங்கள் நிச்சயம் அடுத்தவர்களை அவ்வளவு சுலபமாக விட்டு விடாது என்பார்கள். இச்சாபத்திலிருந்து மீள்வதற்கு நந்தி பகவானை திருதியை திதியில் அபிஷேகம் செய்து பாவத்திற்கு மன்னிப்பு கேட்டால் பலன் கிடைக்கும்.மூன்றாவது சாபம்உடன் பிறந்தவர்களை ஏமாற்றுவது பெரிய பாவமாகும். பாவத்தை செய்த பிறகு பரிகாரம் தேடுவது சரியானது அல்ல. அஷ்டமி திதியில் பைரவருக்கு விளக்கு ஏற்றி சாபம் நீக்க வழிபாடு செய்ய வேண்டும்.
முதன் முதலாக வீட்டிற்கு செல்லும்போது நிறைகுடம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். நிறைகுடம் தண்ணீரில் சிறிது மஞ்சள் கலந்து பூ போட்டு பூஜை அறையில் வைக்கவும் .தண்ணீர் குடத்தில் விபூதி பட்டையிட்டு மஞ்சள் குங்குமம் வைக்கவும், பிறகு குத்து விளக்கு. சாமி படம், கல் உப்பு, விரலி மஞ்சள். புளி, வரமிளகாய், தாம்பூல தட்டு, கற்கண்டு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். சமையலறையில் அரிசி மாவு கோலம் போட்டு அங்கு நிறை செம்பு தண்ணீர் வைக்கவும். ஒரு பெரிய தாம்பாளத்தில் ஒன்பதுதொன்னைஅல்லதுகிண்ணம்எடுத்துகல்லுப்பு,மஞ்சள்தூள், குங்குமம், புளி,வரமிளகாய், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு,பச்சரிசி, சர்க்கரை, அனைத்தையும் கொட்டி வைத்து பூஜை அறையில் வைக்கவும்.
தினந்தோறும் நெற்றிக்கு குங்குமம் இட்டுக் கொள்வீர்கள் அல்லவா, அந்த குங்குமத்தில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நுணுக்கி கலந்துவிட்டு, தினம்தோறும் பச்சை கற்பூரம் கலந்த குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தால் பண ஈர்ப்பு அதிகரிக்கும். தினம்தோறும் பச்சை கற்பூரத்தை எடுத்து குங்குமத்தில் கலக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நாள் குங்குமத்தோடு கலந்து வைத்து மூடி போட்டு விடுங்கள்.அந்த வாசம் அந்தக் குடும்பத்திலேயே நிலைத்திருக்கும். அந்த குங்குமம் தீரும் வரை அப்படியே பயன்படுத்தி வரலாம்.நீங்கள் நம்பவே மாட்டீர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இப்படி குங்குமத்தை உங்கள் நெற்றியில் வைத்து பாருங்கள். கையில் காசு வருவதில் நன்றாக வித்தியாசம் தெரியும்.
எவர் ஒருவர் தொடர்ந்து ருத்ர காயத்திரி மந்திரம் சொல்லி வருகிறாரோ அவர்கள் மனதில் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.ருத்ர காயத்ரி மந்திரம்:நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம…
உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது ஒரு குளம், கிணறு உள்ள சிவன் கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை அந்த சிவன் கோவிலுக்கு மண்டை வெல்லம் 1/2 கிலோ வாங்கி சென்று சிவபெருமானுக்கு விளக்கு போட்டு மனதார நோய் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த கோவிலில் இருக்கும் கிணற்றில் அல்லது குளத்தில் இந்த மண்டை வெல்லம் கரைவதை போல நோய்நொடிகள் கரையட்டும் என வேண்டி போட்டு விட வேண்டும். 21 திங்கட்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்கள் உடல் உபாதைகள் படிப்படியாக குறையும். நோய்கள் தீரும்.
வீட்டி ஓட்டடை அதிகம் இருப்பதும், பழைய உடைந்த ஓட்டையான பொருள்கள் இருப்பதும், எப்போதும் சொட்டிக் கொண்டு இருக்கும் தண்ணீர் குழாய், சாமி படங்கள் சுத்தமில்லாமல் மங்கிய தோற்றத்தில் இருப்பது, தானியங்களை பூச்சி பிடிக்கும் வரை வைத்திருந்து பிறகு எடுத்து வெளியே கொட்டுவது போன்றவை வறுமையை உண்டாக்கும்.கோவில்களில் பிரசாதமாக தரப்படும் வில்வமும் துளசியும் பணப்பெட்டியில் வைத்தால் பணம் சேரும் மேலும் பணம் அந்த பெட்டியில் தங்கும் ஆகையால் பிரசாதங்களை தூக்கி போடாமல் பணப்பெட்டியில் வையுங்கள் இந்த துளசியும்வில்வமும் காய்ந்து போனாலும் இதற்கு உள்ள மகிமை எப்போதும் போகாது.
ஒரு முறை சுற்றினால் இறைவனை அணுக முடியும் 3 முறை சுற்றினால் மனச் சுமை குறையும் 5 முறை சுற்றினால் இஷ்ட சித்தி கிடைக்கும் 7 முறை சுற்றினால் காரியத்தில் வெற்றி கிடைக்கும் 9 முறை சுற்றினால் சத்துரு நாசம் அழியும் 11 முறை சுற்றினால் ஆயுள் விருத்தி கிடைக்கும்.
குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா? என்றெல்லாம் பலர் தயங்குவது உண்டு ஆனால் பிரம்ம முகூரத்தத்திற்கு இந்த தடைகள் எதுவும் இல்லை. காலையில் எழுந்ததும் கதவை திறந்து வாசல் தெளித்து வண்ணக் கோலங்கள் இட்டு வீட்டிற்குள் வந்து முகம் கழுவி விட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்கலாம். அதன் பிறகு நீங்கள் மற்ற வேலைகளை எப்பொழுதும் போல் செய்யலாம். இது தீட்டு அற்ற சமயதிற்கு மட்டுமே பொருந்தும், இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், பொருளாதார ரீதியாகவும், பணப்பிரச்சனை இருந்தாலும் அவை யாவும் நீங்கி செல்வம் பெருகும், மகாலட்சுமி தங்குவாள் என்பது நம்பிக்கை. அதே போல மாலை வேளையை விஷ்ணு முகூர்த்தம் என்று கூறுவார்கள்.
கோவிலுக்கு செல்லும் போது, நல்ல காரியத்துக்கு செல்லும் போது கருப்பு துணிகளை உடுத்திச் செல்ல வேண்டாம் காலையில் கண்விழித்ததுடன் அவரவர் உள்ளங்கையில் கண் விழித்தால் அதிகமான நன்மைகள் சேரும் குலதெய்வம், திருப்பதி திருத்தணி, திருச்செந்தூர், பழனி கோயிலுக்கு சென்றால் நேராக அவரவர் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். குங்குமத்தை வலது கையில் மோதிர விரலில் இருந்து குங்குமத்தை வைப்பது நல்லது. தாலி செயினை எப்பொழுதும் அடகு வைக்க கூடாது. தேரை தேங்காய் தண்ணீரை கர்ப்பிணி பெண் குடிக்க கூடாது.