1-நாம் உபயோகித்த பழைய துணிகளை யாருக்கும் கொடுக்க கூடாது..!! 2-இரவு நேரங்களில் மரத்தடிக்கு அடியில் படுத்து தூங்க கூடாது..!! 3-வீட்டுக் குழாய்களில் நீர் சொட்டக் கூடாது. 4-வாசக்காள் கதவு ஜன்னல்களில் கரையான் அரிக்க கூடாது..!! 5-தலையணை மீது உட்காரக் கூடாது..!! 6.தலையணைக்கு வைக்கும் தலையணையை காலுக்கு வைக்க கூடாது..!! 7-துடைப்பத்தை மிதிக்கவோ, தாண்டவோ கூடாது.!! 8-ஈர உடையுடன் பூஜை செய்யக்கூடாது..!! 9. திருமணமாகாத ஆண்கள், குழந்தைகள் வாழைமரம் வெட்டக் கூடாது..!!"
மொட்டை போடுவது போன்ற சுப காரியங்களை நல்ல நேரம் பார்த்து செய்வது நல்லது.முண்டன் முகூர்த்தம் என்று மொட்டை போடுவதற்கான நல்ல நாட்கள் பஞ்சாங்கத்தில் குறிக்கப்படும்.குழந்தை பிறந்த ஜென்மநட்சத்திரம், பிறந்தநாள், சந்திராஷ்டமம் உள்ள நாள், மரணயோகம், கீழ் நோக்கு நாள், சூரியன் மறைந்த பிறகு, ராகு காலம்,எமகண்டம் போன்ற நாட்களில் மொட்டை அடிக்கக்கூடாது.மொட்டை அடிக்கதைமாதம்சிறந்தது.அஸ்வினி, மிருகசீரிடம்பூசம், அஸ்தம், பூனர்பூசம், சித்திரை, சுவாதி, கேட்டை, திருவோணநட்சத்திரம், அவிட்டம், சதயம் போன்ற நட்சத்திரங்களிலும், திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளிலும் மொட்டை அடிப்பது சிறந்தது.
மாவிலை தோரணத்தை கட்டும் போது 'ஓம்' பிரணவ மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.இதனால் மாவிலை தோரணத்தில் தெய்வீக சக்தி நிறைந்து, வீட்டிற்குள் நன்மைகள் வரவும் செய்கிறது.மாவிலை தோரணம் வீட்டில் குலதெய்வம், இஷ்டதெய்வம் மற்றும் அஷ்டலட்சுமியை வரவேற்கிறது.
'ஓம் ரீங் வசி வசி என்னும் மந்திரத்தை கண்களை மூடி உதடு அசையாமல் காலையிலும் மாலையிலும் வடகிழக்கு திசையை நோக்கி 108 முறை ஜெபிக்கவேண்டும்.தரையில் விரிப்பின் மேல் அமர்ந்து ஜெபிக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள் ஜெபித்தால் சர்வ வசியம் உண்டாகும் தனியாக ஒரிடத்தில் அமர்ந்து மன ஒருமைபாட்டுடன் அமர்ந்து ஜெபிக்க வேண்டும் பொதுவாக எல்லா மந்திரங்களும் ஜெபித்தஉடனேயே பலன் தருவதில்லை ஒரு லட்சம் முறை உரு ஏற்றிய பின்னரே அவை வேலை செய்யத் தொடங்கும். வசிய மந்திரத்தை ஜெபிக்கும்போது வாயின் வலது பக்கத்தில் ஒரு கிராம்பினை ஒதுக்கி வைத்துகொள்ள வேண்டும்.எக்காரணம் கொண்டும் கடிக்கக்கூடாது ஜெபம் முடிந்ததும் கிராம்பைத் துப்பிலிட வேண்டும் இது வசிய சக்தியை விரைவு படுத்த உதவும்.வசியப் பிரயோகம் செய்தால் கண்னுக்குத் தெரிந்த எதிரிகளும் தெரியாத எதிரிகளும் வசியமாகி விடுவார்கள் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம: வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ ரத்னகரீ சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ"
முதல் சாபம்பெற்றோர்களின் சாபம் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இச்சாபத்திலிருந்து மீள்வதற்கு சண்டிகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது சிறந்த பரிகாரமாகும். பெற்றோர்கள் இட்ட சாபத்தை நீக்கும் படி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.இரண்டாவது சாபம்சுமங்கலிகள் கண்ணீர் மல்க விடும் சாபங்கள் நிச்சயம் அடுத்தவர்களை அவ்வளவு சுலபமாக விட்டு விடாது என்பார்கள். இச்சாபத்திலிருந்து மீள்வதற்கு நந்தி பகவானை திருதியை திதியில் அபிஷேகம் செய்து பாவத்திற்கு மன்னிப்பு கேட்டால் பலன் கிடைக்கும்.மூன்றாவது சாபம்உடன் பிறந்தவர்களை ஏமாற்றுவது பெரிய பாவமாகும். பாவத்தை செய்த பிறகு பரிகாரம் தேடுவது சரியானது அல்ல. அஷ்டமி திதியில் பைரவருக்கு விளக்கு ஏற்றி சாபம் நீக்க வழிபாடு செய்ய வேண்டும்.
முதன் முதலாக வீட்டிற்கு செல்லும்போது நிறைகுடம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். நிறைகுடம் தண்ணீரில் சிறிது மஞ்சள் கலந்து பூ போட்டு பூஜை அறையில் வைக்கவும் .தண்ணீர் குடத்தில் விபூதி பட்டையிட்டு மஞ்சள் குங்குமம் வைக்கவும், பிறகு குத்து விளக்கு. சாமி படம், கல் உப்பு, விரலி மஞ்சள். புளி, வரமிளகாய், தாம்பூல தட்டு, கற்கண்டு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். சமையலறையில் அரிசி மாவு கோலம் போட்டு அங்கு நிறை செம்பு தண்ணீர் வைக்கவும். ஒரு பெரிய தாம்பாளத்தில் ஒன்பதுதொன்னைஅல்லதுகிண்ணம்எடுத்துகல்லுப்பு,மஞ்சள்தூள், குங்குமம், புளி,வரமிளகாய், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு,பச்சரிசி, சர்க்கரை, அனைத்தையும் கொட்டி வைத்து பூஜை அறையில் வைக்கவும்.
தினந்தோறும் நெற்றிக்கு குங்குமம் இட்டுக் கொள்வீர்கள் அல்லவா, அந்த குங்குமத்தில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நுணுக்கி கலந்துவிட்டு, தினம்தோறும் பச்சை கற்பூரம் கலந்த குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தால் பண ஈர்ப்பு அதிகரிக்கும். தினம்தோறும் பச்சை கற்பூரத்தை எடுத்து குங்குமத்தில் கலக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நாள் குங்குமத்தோடு கலந்து வைத்து மூடி போட்டு விடுங்கள்.அந்த வாசம் அந்தக் குடும்பத்திலேயே நிலைத்திருக்கும். அந்த குங்குமம் தீரும் வரை அப்படியே பயன்படுத்தி வரலாம்.நீங்கள் நம்பவே மாட்டீர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இப்படி குங்குமத்தை உங்கள் நெற்றியில் வைத்து பாருங்கள். கையில் காசு வருவதில் நன்றாக வித்தியாசம் தெரியும்.
எவர் ஒருவர் தொடர்ந்து ருத்ர காயத்திரி மந்திரம் சொல்லி வருகிறாரோ அவர்கள் மனதில் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.ருத்ர காயத்ரி மந்திரம்:நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம…
உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது ஒரு குளம், கிணறு உள்ள சிவன் கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை அந்த சிவன் கோவிலுக்கு மண்டை வெல்லம் 1/2 கிலோ வாங்கி சென்று சிவபெருமானுக்கு விளக்கு போட்டு மனதார நோய் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த கோவிலில் இருக்கும் கிணற்றில் அல்லது குளத்தில் இந்த மண்டை வெல்லம் கரைவதை போல நோய்நொடிகள் கரையட்டும் என வேண்டி போட்டு விட வேண்டும். 21 திங்கட்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்கள் உடல் உபாதைகள் படிப்படியாக குறையும். நோய்கள் தீரும்.
வீட்டி ஓட்டடை அதிகம் இருப்பதும், பழைய உடைந்த ஓட்டையான பொருள்கள் இருப்பதும், எப்போதும் சொட்டிக் கொண்டு இருக்கும் தண்ணீர் குழாய், சாமி படங்கள் சுத்தமில்லாமல் மங்கிய தோற்றத்தில் இருப்பது, தானியங்களை பூச்சி பிடிக்கும் வரை வைத்திருந்து பிறகு எடுத்து வெளியே கொட்டுவது போன்றவை வறுமையை உண்டாக்கும்.கோவில்களில் பிரசாதமாக தரப்படும் வில்வமும் துளசியும் பணப்பெட்டியில் வைத்தால் பணம் சேரும் மேலும் பணம் அந்த பெட்டியில் தங்கும் ஆகையால் பிரசாதங்களை தூக்கி போடாமல் பணப்பெட்டியில் வையுங்கள் இந்த துளசியும்வில்வமும் காய்ந்து போனாலும் இதற்கு உள்ள மகிமை எப்போதும் போகாது.