25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

Dec 05, 2025

. கருட தரிசனம் கோடி புண்ணியம்.

1. போட்ட அழுக்கு துணியே, மீண்டும் மீண்டும் போடுவது வறுமையை உண்டாக்கும். 2. பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் மஞ்சள்  உரைத்து பூசி குளித்து, கருப்பு மையில் பொட்டு வைத்து கொண்டால் காத்து கருப்பு அண்டாது. 3.அதிகமாக கிழிந்த துணிகளை, உபயோகிக்க கூடாது. இவை தரிதரத்தை உண்டாக்கும். 4. தரையில் கை ஊன்றி சாப்பிடக்கூடாது, இவை நம் சக்தி அனைத்தும் கீழே பூமாதேவி இழுத்து கொள்வாள். 5. கருட தரிசனம் கோடி புண்ணியம். நாம் கருடனை வானத்தில் அண்ணாந்து பார்ப்பது மிகவும் புண்ணியத்தை தரும். 6. பெண்கள் கைகளில் வளைகள் இல்லாமல் சாப்பாடு பரிமாறக்கூடாது .மற்றும் பூஜை அறையில் பூஜை செய்யக்கூடாது, இவை வறுமை உண்டாக்கும்.

Nov 28, 2025

நாம் இறந்த பிறகும் புண்ணியம் தரும் தானம் எது தெரியுமா?.

தாம் உயிரோடு இருக்கும் பொழுது மட்டுமல்லாமல், நாம் இறந்த பிறகும் புண்ணியத்தை தரும் தானம் பசு தானம் மட்டும்தான்.பசுவை தானமாக செய்பவர்கள் இறந்த பிறகு சொர்க்கத்துக்கு செல்வார்கள் என்பது ஐதிகம்.முக்கியமாக கர்ப்பினியான பசுவை தானமாக கொடுத்தால் வைகுண்டத்தில் வாசம் செய்ய அனுமதி கிடைக்கும் ,என்று சாஸ்திரம் கூறுகிறது.நாம் தானம் கொடுக்கும் பொழுது மன தூய்மையுடன், ஒழுக்கத்துடன், முழு மனதுடன் கொடுக்க வேண்டும்.அப்போது தான் நாம் கொடுத்த தானம் நமக்கு நல்ல பலனை பெற்றுத் தரும்.

Nov 21, 2025

சிவபெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் .

எவர் ஒருவர் தொடர்ந்து ருத்ர காயத்திரி மந்திரம் சொல்லி வருகிறாரோ அவர்கள் மனதில் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.ருத்ர காயத்ரி மந்திரம்:நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம

Nov 14, 2025

தானம் 

1. அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும். 2 வஸ்திர தானம் ஆயுளை விருத்தி செய்யும். 3. பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். 4 கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும். 5. தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும். 6 நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும். 7.தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும். & வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும். 9.தேன்தானம்-புத்திர பாக்கியம் உண்டாகும். 10 நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும். 11.அரிசி தானம்-பாவங்களைப் போக்கும். 12 பால் தானம்- துக்கம் நீங்கும்.. 13. தயிர் தானம் இந்திரிய விருத்தி ஏற்படும். 14 தேங்காய் தானம் நினைத்த காரியம் நிறைவேறும். 15.பழங்கள் தானம் புத்தியும் சித்தியும்கிட்டும்.

Nov 07, 2025

புண்ணியத்தின் பலன் எத்தனை தலைமுறையை காக்கும்.

கங்கை போன்ற புனித நதியில் நீராடுவது-3 தலைமுறை. பாழடைந்த கோவிலில் தீபம் ஏற்றுவது- 5 தலைமுறை. கோவில் திருப்பணிக்கு உதவுவது-7 தலைமுறை. ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்வது - 9 தலைமுறை. அனாதை பிணத்திற்கு அந்திம கிரியை - 11 தலைமுறை கோசாலைக்கு உதவுவது, பசு பராமரிப்பு - 13 தலைமுறை. காசி, கயாவில் செய்யப்படும் தர்ப்பணம் -16 தலைமுறை. பசிக்கு உணவு அளிப்பது அன்னதானம் 27 தலைமுறை.

Nov 07, 2025

காலையில் வாசல் தெளிக்கும் முன் கவனிக்க வேண்டியது.

பெண்கள்வாசல் தெளிக்கும் முன், பல் விலக்கி முகம் கழுவி குங்குமம் வைத்துக்கொண்டபிறகு தான் தலை வாசலில் சாணம் அல்லது தண்ணீர் தெளிக்கவேண்டும்.வாசலில்தெளிக்கும் தண்ணீர் சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும் .பல பேர் துணிதுவைத்த தண்ணீர், வெகு நாட்களுக்கு முன்பு சேமித்த தண்ணீர் போன்றவற்றை தலைவாசலில் தெளிப்பார்கள்.அவ்வாறு கண்டிப்பாக செய்யக்கூடாது.தலைவாசலில் பசு சாணம் கரைத்து தெளிக்கலாம் .அவ்வாறு இயலாத பட்சத்தில் சிறிது மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களை தண்ணீரில் கலந்து தெளிப்பது நல்லது.

Oct 31, 2025

வீடுகளில் இருக்க வேண்டியமரங்கள்.

வீட்டுக்கு முன் வேப்பமரம்.பக்கத்தில் ஒரு முருங்கைமரம்.வெளியே பப்பாளிமரம் இருக்க வேண்டும்.குளிக்கும் தண்ணீர் போகும் இடம் வாழை மரம் இருக்க வேண்டும்.பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னைமரம் இருக்க வேண்டும்.ஒரு எலுமிச்சை மரம் அவசியம்,அதன் நிழலின் கீழ் பகுதியில் கறிவேப்பிலைச் செடி இருக்க வேண்டும்.ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும்.வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும்.ஒரு மாமரம் வைக்க வேண்டும்.இப்படி இருந்தால் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள்.

Oct 24, 2025

படுக்கை  அறையில் ஏன் கண்ணாடி வைக்க கூடாது தெரியுமா?

கண்ணாடி எந்த ஒரு விஷயத்தையும் , அப்படியே பிரதிபலிக்கும் அதாவது நாம் சிரித்தால் சிரிக்கும், அழுதால் அழுகும்.அப்படிப்பட்ட கண்ணாடியை நாம் படுக்கை  அறையில் வைத்தால், நாம் தூங்கும் பொழுது அல்லது சண்டை நடக்கும் பொழுது அதை அப்படியே நாம் வீட்டில் பிரதிபலிக்கும்.ஆகையால் அது நமக்கு எதிர்மறை ஆற்றலை உண்டு பண்ணுவதோடு, வீட்டில் செல்வ செழிப்பையும் குறைக்கும். எனவே படுக்கை  அருகில் கண்ணாடியை தவிர்ப்பது நல்லது.

Oct 17, 2025

குடும்பத்துக்கு ஆகாதவை .

1-நாம் உபயோகித்த பழைய துணிகளை யாருக்கும் கொடுக்க கூடாது..!! 2-இரவு நேரங்களில் மரத்தடிக்கு அடியில் படுத்து தூங்க கூடாது..!! 3-வீட்டுக் குழாய்களில் நீர் சொட்டக் கூடாது. 4-வாசக்காள் கதவு ஜன்னல்களில் கரையான் அரிக்க கூடாது..!! 5-தலையணை மீது உட்காரக் கூடாது..!! 6.தலையணைக்கு வைக்கும் தலையணையை காலுக்கு வைக்க கூடாது..!! 7-துடைப்பத்தை மிதிக்கவோ, தாண்டவோ கூடாது.!! 8-ஈர உடையுடன் பூஜை செய்யக்கூடாது..!! 9. திருமணமாகாத ஆண்கள், குழந்தைகள் வாழைமரம் வெட்டக் கூடாது..!!"

Oct 10, 2025

குழந்தைக்கு மொட்டை அடிப்பதால் ஆயுள் விருத்தி ஆகும்.

மொட்டை போடுவது போன்ற சுப காரியங்களை நல்ல நேரம் பார்த்து செய்வது நல்லது.முண்டன் முகூர்த்தம் என்று மொட்டை போடுவதற்கான நல்ல நாட்கள் பஞ்சாங்கத்தில் குறிக்கப்படும்.குழந்தை பிறந்த ஜென்மநட்சத்திரம், பிறந்தநாள், சந்திராஷ்டமம் உள்ள நாள், மரணயோகம், கீழ் நோக்கு நாள், சூரியன் மறைந்த பிறகு, ராகு காலம்,எமகண்டம் போன்ற நாட்களில் மொட்டை அடிக்கக்கூடாது.மொட்டை அடிக்கதைமாதம்சிறந்தது.அஸ்வினி, மிருகசீரிடம்பூசம், அஸ்தம், பூனர்பூசம், சித்திரை, சுவாதி, கேட்டை, திருவோணநட்சத்திரம், அவிட்டம், சதயம் போன்ற நட்சத்திரங்களிலும், திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளிலும் மொட்டை அடிப்பது சிறந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

AD's



More News