குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா?
குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா? என்றெல்லாம் பலர் தயங்குவது உண்டு ஆனால் பிரம்ம முகூரத்தத்திற்கு இந்த தடைகள் எதுவும் இல்லை. காலையில் எழுந்ததும் கதவை திறந்து வாசல் தெளித்து வண்ணக் கோலங்கள் இட்டு வீட்டிற்குள் வந்து முகம் கழுவி விட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்கலாம். அதன் பிறகு நீங்கள் மற்ற வேலைகளை எப்பொழுதும் போல் செய்யலாம். இது தீட்டு அற்ற சமயதிற்கு மட்டுமே பொருந்தும், இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், பொருளாதார ரீதியாகவும், பணப்பிரச்சனை இருந்தாலும் அவை யாவும் நீங்கி செல்வம் பெருகும், மகாலட்சுமி தங்குவாள் என்பது நம்பிக்கை. அதே போல மாலை வேளையை விஷ்ணு முகூர்த்தம் என்று கூறுவார்கள்.
0
Leave a Reply