ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்" திட்டத்தின் கீழ் மானிய விலையில் காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடிகள் தொகுப்பு பெற விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டிற்கு 'ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்" திட்டத்தின் கீழ் ரூ.51.11/- இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதன்படி ஊட்டச்சத்து மிக்க நஞ்சற்ற காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்திடவும், மக்களின் அன்றாட காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத்தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 100 சதவீத மானியத்தில் ரூ.60/- வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது.
நகர்ப்புரங்களிலும் கிராமப்புரங்களிலும் வசிக்கும் மக்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரைவில் பலனளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய பழச்செடித் தொகுப்பு 100 சதவீத மானியத்தில் ரூ.100/- வீதம் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது.இலந்தைப்பயிர் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் எக்டருக்கு மானியமாக ரூ.18,000/- வீதம் 2 எக்டருக்கு ரூ.36,000/- மதிப்பிற்கு நடவுப்பொருள்கள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள பயனாளிகள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply