25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆன்மீகம்

Aug 07, 2022

மரணமில்லா பெரு வாழ்வு ( சன்மார்க்க வாசி யோகம் )

      ஆன்மீகம்  விஷயங்களை  அறிவியல்  மூலமாக உணர்த்தும்,   சன்மார்க்க வாசி யோகம் .07 / 08 / 2022  - TODAY  NIGHT   9 PM TO 10 PM.        CLICK THE LINK  AT 21 PM TO 22 PM .  TO JOIN THE MEETING ON GOOGLE MEET, LINK https://meet.goggle.com/xss-wvpg-mgcor or open meet and enter this code: xss-wvpg-mgc 

Aug 05, 2022

வரலட்சுமி பூஜை

 வரலட்சுமி பூஜை என்றாலே, பெண்களுக்கு ஒரு சிறப்பான நாளாகும். இந்த நன்னாளில் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வீட்டிற்கு அம்மனை அழைத்து, பூஜை செய்து வணங்குவதாகும். இந்த பூஜையில் பெண்கள் விரதம் இருந்து, வீட்டிற்கு சில பேரை அழைத்து பூஜை செய்த பின், தாம்பூலம் வழங்குதல் நடைபெறும்.இந்த  நாளில் கல்யாணம் ஆன பெண்கள் விரதம் இருப்பதன் மூலம் நீண்ட நாள்கள் தாலி பாக்கியத்தைப் பெறுவர் என கூறுவர். திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் நல்ல வாழ்க்கைத் துணை அமையவேண்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது..இந்த பூஜையில் நம்மாள் எது முடியுமோ அதை படைத்து,  அம்மன் பாடல்களைப் பாடி,சுமங்கலிப் பெண்களை அழைத்து உங்களால் முடிந்தவற்றை கொடுத்து அம்மனை வழிபடலாம்.வீட்டில் மகாலட்சுமி, அஷ்டலட்சுமி  அருள் கிடைக்கவும், கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.. 

Jul 29, 2022

குல தெய்வ வழிபாடு

 உங்கள் குலதெய்வ கோயிலுக்கு  அமாவாசை அன்றுசென்று நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு மண் விளக்கு ஏற்றி தீப தூப வழிபாடு செய்ய வேண்டும். ஒரு எலுமிச்சை பழத்தை கோயிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குலதெய்வத்தை  நீண்ட காலம். தொடர்ந்து வழிபாடு ,செய்து வருவதால் தங்கு தடையின்றி காரிய வெற்றி அமையும். .குலதெய்வ வழிபட நியாயமான கோரிக்கைகள் நிறைவேறி ,உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும் .வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் ,குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும்,

Jul 23, 2022

அனுமன்

 திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழன் , சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சார்த்தி வழிபட வேண்டும். எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்தி வழிபடலாம். புதியதாக துவங்கிய  வேலைகளில் தடை நீங்க விரதம் இருந்து அனுமன் வாலில் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் சந்தனமும், அதன்மேல் குங்குமமும் வைத்து ஒரு மண்டலம் வழிபாடு செய்து வரவேண்டும். பறந்து செல்லும் அனுமன் படத்தை வாங்கி, விரதம் இருந்து அதன் வால்பகுதியில் ஒரு மண்டல காலம் பொட்டுவைத்து அனுமன் கவசம் பாடி வழிபட்டால் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.தடைகள் அகலும், குடும்பப் பிரச்சினைகள் அகலும், அனுமனுக்கு வாலில் பலம், முருகனுக்கு  வேலில் பலம் அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறலாம். 

Jul 23, 2022

ஆன்மீக விதி முறைகள்

விநாயகர் கோயிலில் ஒரு முறை வலம் வந்தால் போதுமானதுசிவன் கோயிலில் மூன்று முறை வலம் வரவேண்டும்.சிவன்கோயிலுக்கு சென்றுகாணிக்கை போடாமல் வரக்கூடாது.பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்து கொள்ள கூடாது.தன்னையே சுற்றி  கொண்டு சாமி கும்பிடக் கூடாதுதுளசியை அலம்பி கோயிலுக்கு  எடுத்துச் செல்லக் கூடாது.கண்ணாடி பார்த்துக்கொண்டே  திருநீறு  பூசக்கூடாது

Jul 20, 2022

ஏழுமலையான் திருவுருவச்சிலை அதிசயம் 

ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட்வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால்மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது. ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல்,பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள். அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.  

Jul 15, 2022

அனுமனின் சக்தி

ஆஞ்சநேயருக்கு இனிப்பான ஜாங்கிரி மாலை சார்த்தினாலும் காரமானவடைமாலை சார்த்தினாலும், இரண்டுமே உளுந்தினால் ஆனது என்பதே உண்மை.இரண்டுமே ராகு நேமத்திலிருந்து நம்மை விடுவித்து நல்லது செய்யும் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான் என்று காஞ்சி மகா ஸ்வாமிகள் கூறியுள்ளார். 

Jul 01, 2022

வீட்டின் பூஜை அறையில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கு

வீட்டின் பூஜை அறையில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கின் அடியில் தட்டு வைப்பது அனைவரின் வழக்கம், இந்த தட்டில் பச்சை அரிசியில் மஞ்சள் கலந்து விட்டு. அதனுடன் அரை ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொண்டு, அதன்மீது வாசனை மலர்களை தூவி, அதன் மேல் ஆறு காமாட்சி அம்மன் விளக்கை வைத்து  தீபம் ஏற்றி  வணங்குவது நம் பூஜைக்கான பலன்களை பன் மடங்காகப் பெருக்குகிறது.

Jun 10, 2022

லக்ஷ்மி கடாக்ஷம்

வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு.லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது. நெல்லி நெல்லிமரம் இருக்கும். வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் ,உவர் தன்மையில்லாமல் மிகவும். சுவையாக இருக்கும்.

May 20, 2022

செல்வம் நிலைக்க

ஒருவருக்குபணம்கொடுக்கவேண்டுமென்றால் வாசல்படியில் நின்றுகொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க வாங்க வேண்டும்.செல்வம் நிலைக்க, விருத்தி அடைய பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை. செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும் .வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம். 

1 2 ... 8 9 10 11 12 13 14 15 16 17

AD's



More News