விநாயகர் கோயிலில் ஒரு முறை வலம் வந்தால் போதுமானதுசிவன் கோயிலில் மூன்று முறை வலம் வரவேண்டும்.சிவன்கோயிலுக்கு சென்றுகாணிக்கை போடாமல் வரக்கூடாது.பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்து கொள்ள கூடாது.தன்னையே சுற்றி கொண்டு சாமி கும்பிடக் கூடாதுதுளசியை அலம்பி கோயிலுக்கு எடுத்துச் செல்லக் கூடாது.கண்ணாடி பார்த்துக்கொண்டே திருநீறு பூசக்கூடாது
ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட்வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால்மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது. ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல்,பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள். அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.
ஆஞ்சநேயருக்கு இனிப்பான ஜாங்கிரி மாலை சார்த்தினாலும் காரமானவடைமாலை சார்த்தினாலும், இரண்டுமே உளுந்தினால் ஆனது என்பதே உண்மை.இரண்டுமே ராகு நேமத்திலிருந்து நம்மை விடுவித்து நல்லது செய்யும் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான் என்று காஞ்சி மகா ஸ்வாமிகள் கூறியுள்ளார்.
வீட்டின் பூஜை அறையில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கின் அடியில் தட்டு வைப்பது அனைவரின் வழக்கம், இந்த தட்டில் பச்சை அரிசியில் மஞ்சள் கலந்து விட்டு. அதனுடன் அரை ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொண்டு, அதன்மீது வாசனை மலர்களை தூவி, அதன் மேல் ஆறு காமாட்சி அம்மன் விளக்கை வைத்து தீபம் ஏற்றி வணங்குவது நம் பூஜைக்கான பலன்களை பன் மடங்காகப் பெருக்குகிறது.
வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு.லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது. நெல்லி நெல்லிமரம் இருக்கும். வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் ,உவர் தன்மையில்லாமல் மிகவும். சுவையாக இருக்கும்.
ஒருவருக்குபணம்கொடுக்கவேண்டுமென்றால் வாசல்படியில் நின்றுகொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க வாங்க வேண்டும்.செல்வம் நிலைக்க, விருத்தி அடைய பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை. செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும் .வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
நல்லவை முதலில் நரகமாகத் தோன்றும் முடிவில் சொர்க்கமாகும். தீயவை முதலில் சொர்க்கமாகத் தோன்றும் முடிவில் நரகமாகி விடும்!