நாம் வீட்டிலோ கோவில்களிலோ விளக்கை ஏற்றி நாம் வழிபடுகிறோம்.விளக்கினுடைய ஒளியைப் போன்று நமது வாழ்வும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று நாம் விளக்கு ஏற்றுகின்றோம்.மேலும் நாம் பிறருக்கு உதவியாக இருப்பதற்கும் நமது வாழ்வில் நாம் முன்னேறுவதற்கும் இறைவனுடைய அனுக்கிரகம் வேண்டும் என்பதற்காக விளக்கினை ஏற்றி வழிபடுகிறோம்.
சிலரது வீடுகளில் அசைவம் சமைத்தாலோ அல்லது அசைவம் சாப்பிட்டாலோ விளக்கேற்றமாட்டார்கள். அதே போது வீட்டில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் ஆகிய விட்டாலோ அந்த நாட்களில் வீட்டில் விளக்கேற்ற மாட்டார்கள். வீட்டின் பூஜை அறையை பூட்டி வைத்துவிடுவார்கள். இது முற்றிலும் தவறானது என்பதே ஆன்மிக சான்றோர்கள் சொல்லும் கருத்தாகும். குடியிருக்கும் வீட்டில் எந்த காரணத்திற்காகவும் விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது, என்றே நம்முடைய சமயம் சொல்கிறது.
சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து, . 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடிகட்டி ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்வார்கள். சபரிமலையில் அருளும் ஐயப்பன், தனது மூன்று விரல்களை நீட்டி, ஆட்காட்டி விரலால் பெருவிரலை தொட்டுக்கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். 'சித்' என்றால் அறிவு எனப்பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்' என மாறியது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் இந்த 'சின்' முத்திரையாகும். இந்த முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்ணாரக் கண்டு தரிசிப்பதால், பிறவிப் பயனை அடைந்த மகிழ்ச்சி கிடைக்கும்.ஒவ்வொரு மாதமும் நடை அடைக்கப்படும்போதும், கிலோ கணக்கில் பசுமையான விபூதியை ஐயப்பன் மேல் சாற்றுவார் கள். அந்த விபூதி, 'தவக்கோல விபூதி' என்று அழைக்கப்படு கிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த விபூதி பிரசா தத்தை நெற்றியில் தரித்து, சிறிது உட்கொண்டால் நோய் குணமடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்ராட்ச மாலையை போடுவார்கள். இதற்கு 'தவக்கோலம்' என்று பெயர். அப்போது ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்குமாம்.மீண்டும் ஐயப்பன் கோவில் நடை திறக் கப்படும்போது, உலகத்தின் பார்வை அந்த கோவிலுக்குள் படும் வேளையில் ஐயப்பனின் தவக் கோலம் கலைவதாக நம்பிக்கை. அடுத்த நிமிடம் கோவிலில் ஏற்றிய விளக்கும் அணைந்துவிடும். மனித மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதனால்தான் ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள், எப்போதும் ஐயப்பனின் திருநாமங்களை சத்தம் போட்டு சரணகோஷமாக சொல்கிறார்கள். இவ்வாறு ஐயப்பனின் திருநாமங்களைசொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்க பரவி பக்தி அதிர்வை ஏற்படுத்தும், இது வீட்டில் இருப்பவர்கள் மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால் கூட அவர்களது கவனத்தையும் ஐயப்பனை நோக்கி திரும்ப வைக்கும்.
அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகாபுரி, துவாரகா ஆகியவற்றை மோட்ச புரி தலங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வார்கள். மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகாபுரி, துவாரகா அயோத்யா, சைவ சப்த மோக்ஷ தாயகம் என்பது ஸ்லோகம்.ராமஜன்ம பூமியான அயோத்யா கிருஷ்ண பரமாத்மா பிறந்த பூமியான மதுரா, கங்கை விண்ணிலிருந்து பூமிக்குப் பிரவேசம் செய்யும் தலமாகிய மாயா எனப்படும் ஹரித்துவார், காசி என்ற புண்ணிய ஷேத்திரம், "நகரேஷு காஞ்சி' எனப் புகழப்படும் காஞ்சி மாநகர், அவந்திகா எனும் உஜ்ஜயினி மற்றும் கிருஷ்ண பரமாத்மா ஆண்டருளிய துவாரகா ஆகிய ஏழும் மோட்சபுரிகள் என்று குறிப்பிடப் பெறுகின்றன. இத்தலங்கள் பிறப்பது, வாழ்வது, (நிலைப்பது), இறப்பது என்ற மனித வாழ்க்கையின் ஆதி, நடு, அந்தம் என்ற மூன்று நிலைகளுக்கும் தலையாய இடங்கள் என்று கூறுகிறது புராணம்.
சேஷத்ரம், என்றால் நெல் விளையும் இடம் என்று பொருள். எவ்வாறு தூவப்படும் ஒரு நெல், பத்து நூறாகி, ஆயிரம் லட்சமாகி செழிக்கின்றதோ அவ்வாறு இத்தலங்களில் செய்யும் நற்காரியங்களும் ஒன்று பத்தாகி, நூறு ஆயிரமாகி, லட்சம் கோடியாகிப் பெருகி வாழ்வுக்கு நற்பயனை அளிக்கின்றன.
"காசியை குறித்துச் செல்லும் கால்களே கால்களாகும் காசியை வாழ்த்தும் நாவே நாவெனக் கூறலாகும் காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகளாகும் காசியை இனிது காணும் கண்களே கண்களாகும்'' என்று கூறுகிறது கந்த புராணத்தில் "காசிக் காண்டம்' என்னும் பகுதியில் உள்ள ஒரு பாடல். காசி ஸ்ரீ விஸ்வநாதருக்குக் குளிர்காலச் சட்டை! ( மக்மல் பட்டால் ஆனது) .காசியில் ஐப்பசி மாதம் முதல் மாசி மகாசிவ ராத்திரி வரை கடும் குளிர்காலம்.நகரத்தார்களுக்குச் சிவபெருமானுடன் உள்ள பிணைப்பு குடும்பப் பிணைப்பு.தாய் குழந்தைக்குக் குளிரடித்தால் சேலை தலைப்பு கொண்டு போர்த்துவது போல்,''காசி விஸ்வநாதருக்குக் குளிரடிக்குதே'' என்று தோளில் துண்டு மட்டும் அணிந்து சட்டை இல்லாத நகரத்தார் , அந்த காலங்களில் ஸ்ரீ விஸ்வநாதருக்கு 'மக்மல் பட்டு' அணிவிக்க ஏற்பாடு செய்து ,அதை நீடித்து கைங்கரியம் செய்ய கட்டளை ஏற்படுத்தி இன்றளவும் அவ்வாறே நடந்து வருகிறது.இஃதன்றி ஏகாதசி நாளில் அல்வாவும்,சோமவார உச்சி காலத்தில் பூரியும் நகரத்தார் நைவேத்திய உபயமாக உள்ளன.ஜோதிர்லிங்கமான காசி விஸ்வநாதருக்கு மூன்று வேளையும் பூஜைப் பொருள்களை வழங்கி பூஜை செய்யும் பேற்றினைப் பெற்றவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர்.காசி நகரத்தார் சத்திரம் விஸ்வேசர் கோயிலுக்கு அருகேயுள்ள குடோலியா சந்நிதியை அடுத்து அமைந்த கட்டடமாகும். கடந்த 200 ஆண்டுகளாகச் செயல்படும் இந்நிறுவனம் பசு மடம், நந்தவனம் உண்டாக்கி விஸ்வநாதருக்குப் பாலும் மலர்களும் வழங்குகிறது. உஷத் காலத்தில் "பத்தாஸ் மிட்டாய்' எனப்படும் இனிப்புப் பண்டம், உச்சிக் காலத்தில் பருப்புப் பொங்கல், அர்த்த சாமத்தில் சர்க்கரைப் பொங்கலும் நகரத்தார் சத்திரத்தில் இருந்து அனுப்பப்படும் பொருள்களைக் கொண்டு கோயில் மடப்பள்ளியில் செய்து, நைவேத்யம் செய்யப்படுகிறது.தினமும் மூன்று முறை விஸ்வேஸ்வரருக்கான பூஜை, அபிஷேக, அலங்காரப் பொருள்களை நகரத்தார் சத்திரத்திலிருந்து எடுத்துச் செல்லும் போது, மேளம் தாளம் ஒலிக்க, "சம்போ சம்போ சங்கர மகாதேவா' என்று கோஷமிட்டுச் செல்வதைத் தெருக்களில் இருப்பவர்களும், கடைகளில் உள்ளவர்களும், கட்டடங்களில் வசிப்பவர்களும் மரியாதையுடன் சென்று, பார்த்து தலை வணங்குவர்.ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்த போதும்கூட "சம்போ'' நேரப்படி தவறாமல் நடைபெறும் என்றும் பஞ்சாப் மெயில் தாமதமானாலும் கூட நகரத்தார் சம்போ நேரப்படி வந்து விடும் என்பதும் காசியில் பழமொழியாகவே வழங்கப்படுகிறது. குளிர் காலத்தில் ஐப்பசி மாதம் வஸந்த பஞ்சமியிலிருந்து மாசி மாதம் சிவராத்திரி வரை குளிர்கால சட்டை (மக்மல் பட்டால் ஆனது) காசி விஸ்வநாதருக்கு அணிவிக்க காசி நகரத்தார் கட்டளை உண்டு என்பதும் சிறப்பாகும்.காசியில் நகரத்தார் ஏற்படுத்தியுள்ள கட்டளைகள்.1, பால் கட்டளை.2, பசுமடக் கட்டளை.3, நந்தவனக் கட்டளை.4, வில்வம் அட்ச்சதை அருகம்புல் கட்டளை.5, புனுகு சட்டக் கட்டளை.6, கற்பூரக் கட்டளை.7, அத்தர் கட்டளை.8, விசாலாட்சி அம்பாள் திருப்பள்ளி எழுச்சிக் கட்டளை.9 ,விசாலாட்சி அம்பாள் பால் அபிஷேகக் கட்டளை.10, அன்னபூரணி அம்பாள் பால் அபிஷேகக் கட்டளை.11, உபதான அரிசிக் கட்டளை.(காப்பு அரிசி)12, சாதுக்கள் போஜன கட்டளை.13, பிராமண போஜன கட்டளை.14, சில்லறை பிராமண போஜன கட்டளை.15, வெள்ளி சாமான் நல்ல முறையில் பாதுகாக்கக் கட்டளை.16, சாதுக்கள் ஏழைகளுக்கு நித்தியபடி கட்டளை.17, சோமவாரக் கட்டளை.18, அன்னதானக் கட்டளை.19, நகரேஸ்வரர் கோவில் சிவலிங்க பிரதிஷ்ட கட்டளை.20, நெய்வேத்ய கட்டளை.21, வயிரவர் தீபக் கட்டளை.22, முக்தி மண்டப தீபக் கட்டளை.23, திருவனந்தல் கட்டளை.24, வில்வ ஆர கட்டளை.25, சாம்பிராணிக் கட்டளை.26, கங்கை அபிசேகக் கட்டளை.27, அன்ன தானம் அகண்ட தீபக் கட்டளை.அனைத்து கட்டளைகளுக்கும் தனி தனி நிரந்தர வைப்பு மூலம் வரவு செலவு செய்ய படுகிறது.சத்திரத்தில் இருந்து விஸ்வநாதர் கோவிலுக்குச் சம்போ கொண்டு செல்லும் அழகு பயம் கலந்த பக்தியோடு நடைபெறும் தினசரி இருவேளை நிகழ்வு.சம்போவுக்குரிய பொருட்கள் அழகாக கட்டப்படும்,மூடி கொண்டு மூடப்பட்டும் தயாராக சத்திரத்து முதல் மாடியில் அலுவலகத்தில் உள்ள சுப்பிரமணியர் படத்துக்கு முன் வைக்கப்பட்டு சாம்பிராணி போடுவார்கள்,கீழே பாதாள ஈஸ்வரர் கோவிலில் இருந்து தசாங்கம் போட்டு கொண்டுவருவார்கள் ,உடனே நான்கு இந்துஸ்தானி பிராமணர்கள்,நகரத்தார் சாமன்களைத் தூக்கி கொண்டு நாதஸ்வர கோஷ்டி உடன் செல்ல (வாசிப்பு இல்லை)'சம்போ சங்கரா'என்று உரத்த குரலில் சொல்லிக்கொண்டு கடைவீதி வழியாக செல்லும் போது வழியில் கடைக்காரர்கள் பொதுமக்கள் ஓரம் ஒதுங்கி தலை வணங்கி,கை கூப்பி மரியாதை செய்வார்கள்.விஸ்வநாதர் கோவிலில் இரண்டு நேரமும் நகரத்தார் பெயருக்கு அஷ்டோத்திர அர்ச்சனை செய்ய நகரத்தார் நியமித்த அத்தியான குருக்கள் வந்து தயாராக இருப்பார்.ஷெனாய் இசையே மங்கள இசையாக வாசிக்கப்படும் வடநாட்டுக் கோவில்களில் ,விஸ்வநாதர் கோவிலில் உச்சி காலம்,அர்த்தஜாமம் இரண்டுக்கும் நகரத்தார்கள் ஏற்பாடு செய்துள்ள நாதஸ்வர இசையே வாசிக்கப்படும்.கோவிலில் பாண்டாக்கள் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நகரத்தார்களுக்கு முதல் மரியாதை செய்து ஆரத்தி செய்வார்கள்.இன்றளவும் 'சம்போ' பார்த்து வட நாட்டு கோடீஸ்வரர்கள் பிர்லா போன்றோர் ஒரு நேரமாவது கைப்பற்றத் துடித்தார்கள்.ஆனால் விஸ்வநாதர் அருளால் நீதிமன்றம் அனைத்தையும் தள்ளுபடி செய்து மூன்று கால பூசை உரிமை நகரத்தார்களுடையதே என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.நன்றி: காசி சத்திரம் கடந்து வந்த பாதை - நகரத்தார் சத்திரம்,காசி.காசி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில்
சிவபெருமானை வழிபட்டு சிவலிங்கம் ஒன்றைப் பெற்றான் ராவணன். அதை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சிறுவனாக வந்த விநாயகர் தடுத்து திருக்கோகர்ணம் என்னும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார். கர்நாடகாவிலுள்ள இத்தல சிவன் மகாபலம் பொருந்தியவர் என்பதால் 'மகாபல நாதர்' எனப் பெயர் பெற்றார். இவருக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். குருக்கள் மந்திரம் மட்டும் சொல்லுவார். பூக்களால் அர்ச்சனையைநாம் செய்யலாம். சுவாமியின் திருமேனி பூவின் இதழ் போல நீண்டும், லிங்க பாணம் இல்லாமல் துளையாக இருக்கும். அதற்குள் ராவணன் கொண்டு வந்த ஆத்ம லிங்கம் உள்ளது. ஆறடி உயரம் கொண்ட இதனை 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகத்தின் போது மட்டும் தரிசிக்கலாம். சிறுவனாக வந்த விநாயகருக்கும் இங்கு கோயில் உள்ளது.
ஒரு பௌர்ணமி நாட்களில் மண் அகல் விளக்கை வாங்கி நல்லெண்ணெய் ஊற்றி குல தெய்வத்தை நினைத்து அந்த எண்ணெயில் ஒரு சொட்டு தேன், 3 மிளகு, 2 சிட்டிகை மஞ்சள் தூளை கலந்து, பஞ்சு திரி போட்டு குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். குலதெய்வத்திற்கு இனிமையான தேன் கலந்த, மங்களகரமான மஞ்சள் கலந்த, கரும் மூலிகையான மிளகு சேர்த்து தீபம் ஏற்றும் போது, நம்முடைய வீட்டில் தடைப்பட்டு வந்த மங்களகரமான காரியங்கள் நடக்கும்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சன்னிதியில் அரியும் சிவனும் இணைந்து நிற்கும் கோலம் வேறு எங்கும் பார்க்க முடியாத காட்சியாகும்.சிவன் அபிஷேகப் பிரியர், விஷ்ணு அலங்காரப் பிரியர். இருவரும் ஓருடலாய் இருப்பதால் சங்கரநாராய்ணருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது.
திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்தில் வைகாசி பௌர்ணமி, தை அமாவாசை நவராத்திரியின் கடைசி நாளான விஜய தசமி நாளில் நெய்குள தரிசன உற்சவம் நடைபெறும் இந்நாட்களில் அம்பாள் சன்னதியின் முன்பாக 15 அடி நீளம், 4 அடி அகலத்திற்கு வாழை இலைகளை பரப்பி, சுற்றிலும் தென்னமட்டைகளை வைத்து, தடுப்பு அமைத்து விடுவர். பதினைந்து அடிநீள பகுதி, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, முதல் பகுதியில் சர்க்கரைப் பொங்கல்,இரண்டாம் பகுதியில் புளியோதரை, மூன்றாம் பகுதியில் தயிர் சாதம் என நிரப்பப்படும் முதல் பகுதியான சர்க்கரைப் பொங்கலின் நடுவே பள்ளம் அமைத்து, அதில் உருக்கிய நெய் ஊற்றி குளம் போல் அமைத்து அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு திரையிடப்படும் அலங்காரங்கள் முடிந்து திரை விலக்கப்படும் போது சர்வ அலங்காரத்தில் அம்பாளின் திருமுகம் அந்த நெய்க்குளத்தில் தெரியும் இதுவே நெய்குள் தரிசனம் இந்த நெய்குள் தரிசனம் காண்பவருக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை.