25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில்லிங்க வடிவ ரங்கநாதர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில்லிங்க வடிவ ரங்கநாதர்

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் ரங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவலிங்கம் போல சதுர வடிவில் ரங்கநாதர் காட்சி தருகிறார்.திருமாலை மணக்கோலத்தில் காண இங்கு கருடாழ்வார் தவமிருந்தார். திருமாலும் காட்சியளிக்க, அந்த இடத்தில் சுயம்புவாக திருமால் எழுந்தருளினார். பின்னாளில் காரை மரங்கள் நிறைந்த காடாக இப்பகுதி இருந்தது. அங்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று குறிப்பிட்ட இடத்தில் தினமும் பால் சொரிந்தது. தோண்டிய போது ரத்தம் பீறிட்டது. அந்த இடத்தில் சுயம்புவாக தான் இருப்பதை அசரீரியாகத் தெரிவித்தார் திருமால். அவருக்கு கோயில் கட்டப்பட்டது.

கருவறையில் மூலவர் சதுரபீடமாக இருக்கிறார். இவரை ரங்கநாதர், வெங்கடேசப்பெருமாள் என அழைக்கின்றனர். பிரம்ம, கருட தீர்த்தங்கள் உள்ளன. வேணுகோபாலர், சந்தான கிருஷ்ணர், பரவாசுதேவர், நாகர், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. மூலவரை பார்த்தபடி அனுமன் உள்ளார். இவரது சிலையும் பெரிய சதுரக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு அருகிலுள்ள மலை மீது தாயார் சன்னதி உள்ளது. 'பெட்டத்தம்மன்' என அழைக்கின்றனர். மாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் மலைக்கோயிலில் உள்ள தாயாரை கும்பத்தில் எழுந்தருளச் செய்து அடிவாரக் கோயிலுக்கு கொண்டு வருவர். அதை கருவறையில் வைத்து பூஜை நடத்துவர். மறுநாள் அதிகாலையில் திருக்கல்யாண வைபவம் நடக்கும். ரங்கநாதருக்கு வலது புறத்தில் ரங்கநாயகிக்கு பிற்காலத்தில் தனி சன்னதி கட்டப்பட்டது.

இங்கு வரும் பக்தர்களுக்கு சடாரி வைப்பதில்லை.ராம பாணத்தால் ஆசியளிக்கின்றனர். இதற்குள் திருமாலின் ஆயுதமான சக்கரம், ஆதிசேஷன் வடிவங்கள் உள்ளன. மாசிமகத்தன்று சுவாமி தேரில் எழுந்தருள்வார். தேர் நிலைக்கு வந்ததும்,பக்தர்கள் தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகியவை கலந்த பிரசாதத்தை ஏந்தி, 'ரங்கன் வருகிறான், கோவிந்தன் வருகிறான்,' எனச் சொல்லி ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வர். இதற்கு 'கவாள சேவை' என்று பெயர்.

தேரோட்டத்தின் போது சுவாமியின் பாதத்தில் தண்ணீர் விடும் 'தண்ணீர் சேவை', கையில் பந்தம் ஏந்திக் கொள்ளும் 'பந்த சேவையை' பக்தர்கள் வேண்டுதலாகச் செய்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News