25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Jun 10, 2025

2027ல்  நடக்க உள்ள ஆசிய கோப்பை கால்பந்து .

2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ள ஆசிய கோப்பை கால்பந்து தொடர். மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன.உலகத் தரவரிசையில் 127 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. தகுதிச்சுற்றில் இந்திய அணி, 0-1 என ஹாங்காங் அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்தியா வென்றால், 5.43 லட்சம் பரிசு தரப்படும் என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது.எனினும் தரவரிசையில் 26 இடம் பின் தங்கிய ஹாங்காங்கிடம் தோற்றது, கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

Jun 09, 2025

கிரிக்கெட்

முன்னாள் இந்திய கேப்டன் தோனி, ஹைடன் (ஆஸி.,) உள்ளிட்ட 7 பேர் கிரிக்கெட் அரங்கில் சாதித்த ஜாம்பவான்களுக்கான ஐ.சி.சி., 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம் பிடித்தனர். கோவை, ஸ்ரீ ராம கிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்த டி. என். பி. எல்., லீக் போட்டியில் சேப் பாக்கம், நெல்லை அணிகள் மோதின, சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்தது, நெல்லை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்து தோல்வி யடைந்தது. 

Jun 09, 2025

டென்னிஸ்

பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர் ,டொமினிகன் குடியரசில். பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சஹாஜா, ஜப்பானின் ஹிரோகா குவாட்டா ஜோடி, பிரிட்டனின் எஸ்தர் அடிஷினா, வெனிசுலாவின் சோபியா எலினா ஜோடியை எதிர் கொண்டது.முதல் செட்டை சஹாஜா ஜோடி என 6-3 கைப்பற்றி,. தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 14 நிமி டம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா ஜோடி, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. இந்திய வீராங்கனை வைஷ்ணவி உஸ்பெகிஸ்தானில் நடந்த ஐ.டி.எப்., ஒற்றையர் பிரிவு பைனலில் 2-6, 4-6 என ரஷ்யாவின் பான்ஷினாவிடம் வீழ்ந்து 2வது இடம் பிடித்தார். டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவு தரவரிசையில், பிரெஞ்ச் ஓபனில் பைனல் வரை சென்ற இத்தாலியின் ஜானிக் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண் டார். பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 2வது இடத்தில் நீடிக்கிறார்.

Jun 09, 2025

விளையாட்டுபோட்டிகள் .june10th

துப்பாக்கி சுடுதல். உலக கோப்பை தொடர் ஜெர்மனியில் இன்று துவங்குகிறது. இதில் இந்தியாவின் இளவேனில், வருண் தோமர், மனு பாகர், ஈஷா சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கால்பந்து 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ள ஆசிய கோப்பை கால் பந்து தொடரில் மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. இவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும் போட்டிகள் நடக்கும். புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.உலகத் தரவரிசையில் 127வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.  கோல் எதுவுமின்றி ,இந்தியா-வங்கதேசம் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது. இன்று ஹாங்காங்கில்,  நடக்கும் போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்திக்கிறது.  

Jun 08, 2025

சர்வதேச செஸ் நார்வே

சர்வதேச செஸ் நார்வேயில்,  ('கிளாசிக்கல்') தொடர் நடந்தது. மொத்தம் 6 பேர் பங்கேற்றனர். 9 சுற்று முடிவில் நார்வேயின் கார்ல்சன் (15.0), இந்தியாவின் குகேஷ்(14.5), அமெரிக்காவின் நகமுரா (13.0), பேபியானோ (12.5), பேபியா, இந்தி யாவின் அர்ஜுன் (11.5) 'டாப்-5' இடத்தில் இருந்தனர். 10வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றால் சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில், பேபியானோவை சந்தித்தார். இதன் 48 வது நகர்த்தலில் செய்த தவறு காரணமாக, 50வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியடைந்தார்.கார்ல்சன், அர்ஜுன் மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' அர்ஜுன் வெற்றி பெற்றார். இதையடுத்து 16 புள்ளி பெற்ற கார்ல்சன், நார்வே தொடரில் 7வது முறையாக சாம்பியன் ஆனார்.ரூ.53 லட்சம் பரிசு பெற்றார். பேபியானோ 15.5 புள்ளியுடன் (ரூ.26.40 லட்சம்) இரண் டாவது இடம் பெற்றார். குகேஷிற்கு (14.5) 3வது இடம், ரூ.15.10 லட்சம் கிடைத்தது.5வது இடம் பெற்ற அர் ஜூன் ரூ. 11.32 லட்சம் பெற்றார்.இந்தியாவின் ஹம்பி, பெண்கள் பிரிவில் 10வது சுற்றில் சீனாவின் வென்சுனை 'டை பிரேக்க ரில்' வென்றார். முடிவில் 15 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்தார். உக் ரைனின் அனா முஜிசக் (16.5), சீனாவின் டிங் ஜீ (16) முதல் இரு இடம் பிடித்தனர். இந்தியாவின் வைஷா லிக்கு (11) 5வது இடம் கிடைத்தது.

Jun 08, 2025

சீனதைபேயில், தைவான் தடகள ஓபன்.

.தைவான் தடகள ஓபன் சீனதைபேயில்,  நடந்தது. பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில், தமிழகத்தின் வித்யா ராம்ராஜ்(56.53 வினாடி) தங்கப்பதக்கத்தை சென்றார். ஆண்களுக்கான 400 மீ.,தடை தாண்டும் ஓட்டத்தின்  பைனலில் யாஷஸ் பாலக்ஷா (49.22 வினாடி) வெள்ளி வென்றார். இந்தியாவின் பூஜா பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் - இலக்கை 2 நிமிடம், 02.79 5 வினாடியில் கடந்து, புதிய சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனைடிவிங்கிள் சவுத்தரி (2 நிமி டம், 06.96 வினாடி) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.  இந்தியாவின் கிருஷ்ணன்குமார், ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 48.46 வினாடியில் கடந்து,  , தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.  விஷால், தரம்வீர் சவுத்தரி, சந்தோஷ், மானு அடங்கிய இந்திய அணி ஆண்களுக்கான 4×400 மீ.,தொடர் ஓட்டத்தின் பைனலில் (3 நிமிடம், 05.58 வினாடி) தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றது.

Jun 08, 2025

ஈட்டி எறிதல்

இந்தியாவின் ரோகித் யாதவ் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் (74.42 மீ.,) தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் அன்னு ராணி பெண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் (56.82 மீ.,) தங்கம் வென்றார்.

Jun 08, 2025

நீளம் தாண்டுதல்.

இந்தியாவின் ஷைலி சிங் (6.41மீ.,), ஆன்சி ஜோசன் (6.39 மீ.) வெள்ளி, வெண் கலத்தை பெண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் கைப்பற்றினர்.இத்தொடரில் இந்தியா வுக்கு 12 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 16 பதக்கம் கிடைத்தது. 

Jun 06, 2025

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி9-வது சுற்றில் குகேஷ் வெற்றி

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடக்கும்ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ்,5முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென்(நார்வே) உள்பட 6 வீரர்கள், பங்கேற்றுள்ளனர். இதில்ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதன் 9வது சுற்று ஆட்டம் ஒன்றில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய தமிழகத்தை சேர்ந்த குகேஷ் 40வது நகர்த்தலில் சீனாவின் வெய் யியை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 23-வது நகர்த்தலில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஹிகாருநகமுராவிடம்(அமெரிக்கா) டிரா கண்டார். இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க நடந்த டைபி ரேக்கரில் நகமுரா 48-வது நகர்த்தலில் எரிகைசியை வீழ்த்தினார்.9வது சுற்று முடிவில் கார்ல்சென் 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,குகேஷ் 14% புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நகமுரா 13 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.கடைசி சுற்றில் குகேஷ், பாபியானோ கருனாவையும், கார்ல்சென், அர்ஜூன் எரிகைசியையும் சந்திக்கிறார்கள். இதன் முடிவில்யாருக்கு சாம்பியன் பட்டம் என்பது தெரியவரும்.

Jun 06, 2025

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசனில் கோவா அணிமுதலிடம்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் ஆமதாபாத்தில் (குஜராத்), நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் நடப்பு சாம்பியன்' கோவா, புனே அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கோவா வின் ஹர்மீத் தேசாய், புனேயின் அல்வரோ ரோபிள்ஸ் மோதினர். இதில் ஹர்மீத் 2-1 என வெற்றி பெற்றார்.பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கிருத்விகா சின்ஹா ராய் (கோவா) 2-1 என ஜியோன் லீயை (புனே) வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் போட்டியில் கோவாவின் ஹர்மீத் தேசாய், ஜெங் ஜியான் ஜோடி 3-0 என புனே யின் ஜியோ லீ, அனிர்பன் கோஷ் ஜோடியை தோற்கடித்தனர். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஜெங் ஜியான் (கோவா) 2-1 என ரீத் ரிஷ்யாவை (புனே) வென்றார்.கோவா அணி 10-5 என வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 3 போட்டியில், 2ல் வென்ற கோவா அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

1 2 ... 120 121 122 123 124 125 126 ... 158 159

AD's



More News