இந்தியாவின் ஜெனிபர் வர்கீஸ் சர்வதேச டேபிள் டென்னிஸ் 'சாம்பியன்'.
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் ,சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், உலக கன்டெண்டர் சீரிஸ் தொடர். 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கானஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜெனிபர் வர்கீஸ் ஆஸ்திரேலியாவின் கான்ஸ்டன்டினாவை சந்தித்தார்.
ஜெனிபர்,முதல் செட் 11-5 என, அடுத்த செட்டை 11-6 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் கடும் போராட்டத்துக்குப் பின் 13-15 என இழந்தார்.
முடிவில் ஜெனிபர் 3-1 என்ற (11-5, 11-6, 13-15, 11-5) கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
இந்தியாவின் ஜெனிபர், சுதான்ஷர் ,19 வயது பிரிவு கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் 3-0 (14-12, 11-9, 12-10) செட்டில் ஆஸ்திரேலியாவின் சிட்னி வின், சியுக் டங் ஜோடியை வென்று, பைனலுக்குள் நுழைந்தனர்.
0
Leave a Reply