உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடரில் காலிறுதியில் இந்தியா .
கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில், மொத்தம் 36 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின.
இந்திய அணி, 'எச்' பிரி வில் ஐக்கிய அரபு எமிரேட் (யு.ஏ.இ.,), இலங்கை, நேபாளம் அணிகளுடன் இடம் பெற்றிருந்தது.நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, யு.ஏ.இ. அணிகள் மோதி, இந்திய அணி 45-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தியாவின் உன்னதி ஹூடா. தான்வி சர்மா, சூர்யாக் ஷ்ரவாத் ஒற்றையரில் வெற்றி பெற்றனர். முதலிரண்டு போட்டியில் நேபாளம், இலங்கையை வீழ்த்திய இந்தியா, வெற்றியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது .இந்தியா, தென் கொரியா அணிகள் இன்று நடக்கும் காலிறுதியில் மோதுகின்றன
0
Leave a Reply