25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
"குறிஞ்சிச் செல்வர்" டாக்டர்.கொ.மா.கோதண்டம்அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி . >> நான்கு வழிச் சாலை ரயில்வே ஸ்டீல் ஆர்க் பிரிட்ஜ் பணிகள் வேகம் . >> இரு மாதங்களாக கடும் வெயில் பாதிப்பினால் வற்றும் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்: >> ஆக்கிரமிப்புகளை அகற்ற ,புது பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கத்திற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ். >> ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை. >> ராஜபாளையத்தில் மக்காச்சோளம் பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி .. >> பள்ளி ஆண்டு விழா , முத்தமிழ் மன்ற விழா. >> விநாயகர் சதுர்த்தி பூஜை >> நெடுஞ்சாலை துறை சார்பில் சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு. >> இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம். >>


கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப்   இந்தியா வெற்றி பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் இந்தியா வெற்றி பெற்றது.

அசாமின் கவுகாத்தியில், கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 36 அணிகள்  8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'எச்' பிரிவில் இடம் பெற்ற இந்தியா அணி, நேபாளம், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளை வென்றது.

இந்தியா, தென் கொரியா அணிகள் நேற்று நடந்த காலிறுதியில் மோதின. முதல் செட்டை  44-45 என இழந்த இந்தியா, அடுத்த இரு செட்களை 45-30, 45-33 எனக் கைப்பற்றியது. முடிவில் உன்னதி ஹூடா, ரேஷிகா, ரவுனக் சவுகான், பார்கவ், விஸ்வா உள்ளிட்டோர் இடம் பெற்ற இந்திய அணி 2-1 (44-45, 45-30, 45-33) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் அரையிறுதியில்  இந்தியா, இந்தோனேஷியா அணிகள் மோதுகின்றன.

கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியானது.தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு 11 பதக்கம் கிடைத்துள்ளன .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News