தெலுங்கு டைட்டன்ஸ் புரோ கபடி லீக் 12வது சீசன் போட்டியில் வெற்றி !
புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலைவாஸ், பெங்களூரு, பெங்கால், பாட்னா என, 12 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' ஹரியானா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஹரியானா வீரர்களை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி, முதல் பாதி முடிவில் 26-16 என முன்னிலையில் இருந்தது.ஆட்ட நேர முடிவில் இரண்டாவது பாதியிலும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-29 என்ற கணக்கில், தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது.
தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 'ஆல்-ரவுண்டர்' பாரத் (20 புள்ளி), கேப்டன் விஜய் மாலிக் (8) கை கொடுத்தனர். ஹரியானா சார்பில் மயங்க் சைனி 5, கேப்டன் ஜெய்தீப், வினய் தலா 4 புள்ளி பெற்றனர்.இதுவரை விளையாடிய 13 போட்டியில், 8 வெற்றி, 5 தோல்வி என, 16 புள்ளிகளுடன் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 3வது இடத்தில் நீடிக்கிறது. ஏழாவது தோல்வியை பெற்ற ஹரியானா (12 புள்ளி) 8வது இடத்தில் உள்ளது.
0
Leave a Reply