பின்லாந்தின் ஆர்டிக் ஓபன் சர்வதேச பாட்மின்டன் தான்யா,அன்மோல் கார்ப் வெற்றி பெற்றனர்..
பின்லாந்தின் ஆர்டிக் ஓபன் சர்வதேச பாட்மின்டன் தொடர் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் தான்யா, சீன தைபேவின் ஹுவாங்கை சந்தித்தார். 45 நிமிடம் நடந்த போட்டி முடிவில் தான்யா, 22-20, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப், சீன தைபேவின் லின் ஹி மோதி,. அன்மோல் 23-21, 11-21, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் முன்னணி வீரர் லக்சயா சென், ஜப்பானின் நரவோகாவை ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் எதிர்கொண்டார்.. 57 நிமிடம் நடந்த போட்டியின் முடி வில் லக்சயா 15-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்
0
Leave a Reply