25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Jun 05, 2026

தெற்காசிய கால்பந்து: பூடானை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது இந்திய பெண்கள் அணி!

கோவாவில் நடக்கும் தெற்காசிய பெண்கள் கால்பந்து தொடரின் அரையிறுதியில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் பூடானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் இந்தியாவின் சன்பிதா வெற்றி கோலை அடித்தார். நாளை நடக்கும் மெகா பைனலில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

Jun 04, 2026

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் இந்திய வீரர்கள்ஆயுஷ் ஷெட்டி, ரோஹன் - ருத்விகா ஜோடி வெற்றி.

ஜகர்தாவில் நடைபெறும் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.ஆண்கள் ஒற்றையர்: இந்தியாவின் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் ஹோங் யங் வெங்கை 8-21, 22-20, 21-15 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.கலப்பு இரட்டையர்: இந்தியாவின் ரோஹன் கபூர் - ருத்விகா காடே ஜோடி 21-14, 21-14 என்ற நேர்செட்களில் சீன தைபேயின் போ ஹூன் யங் - லிங் பாங் ஹூ கூட்டணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.

Jun 04, 2026

நார்வே செஸ்போட்டியின் 8-வது சுற்றில், மாக்னஸ் கார்ல்செனை மீண்டும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா.

ஆஸ்லோவில் நடைபெற்று வரும் 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டியின் 8-வது சுற்றில், தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா உலக தரம் வரிசையில் முதலிடத்தில் உள்ள மாக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி மாஸ் காட்டியுள்ளார்.அபார வெற்றி: கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா, 50-வது காய் நகர்த்தலில் கார்ல்செனை தோற்கடித்தார்.2-வது முறை: இந்த நடப்புத் தொடரின் கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்செனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது 2-வது முறையாகும்.10 சுற்றுகள் கொண்ட இத்தொடரின் முடிவில் அதிக புள்ளிகள் பெறுபவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார்.

Jun 04, 2026

ஆசிய கோப்பை ஹாக்கி இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

ஜப்பானில் நடைபெற்று வரும் சப்-ஜூனியர் (18 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை ஹாக்கி  போட்டியில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் இமாலய வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன:ஆண்கள் பிரிவு: தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.பெண்கள் பிரிவு: சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் 25-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி துவம்சம் செய்து, தொடர்ந்து 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது.

Jun 03, 2026

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு

போட்டி விவரம்: சர்வதேச பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி  போட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஜூன் 15 முதல் 21 வரை நடக்கிறது.பிரிவுகள்: 'ஏ' பிரிவில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, உருகுவே ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் நியூசிலாந்து, சிலி, தென் கொரியா, பிரான்ஸ் அணிகளும் உள்ளன.சுற்று முறை: லீக் சுற்றில் தலா 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் வெல்லும் அணி 'புரோ லீக்' போட்டிக்கு தகுதி பெறும்.

Jun 03, 2026

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: சிந்து, இரட்டையர் ஜோடி அபாரம்; ஆண்கள் ஒற்றையர் ஏமாற்றம்.

பி.வி.சிந்து சாதனை: தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறிய சிந்து, 3 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தரவரிசையில் மீண்டும் டாப்-10 இடத்திற்குள் (10-வது இடம்) நுழைந்துள்ளார்.ஆண்கள் இரட்டையர்: இந்தியாவின் ஹரிகரன் - எம்.ஆர்.அர்ஜூன் இணை மலேசிய ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.தோல்விகள்: ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், லக்ஷயா சென் ஆகியோர் நேர் செட்களில் தோற்று வெளியேறினர்.

Jun 03, 2026

நார்வே செஸ்: பிரக்ஞானந்தா, திவ்யா தேஷ்முக் வெற்றி.

ஆண்கள் பிரிவு: 7-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரெஜாவை வீழ்த்தி 9 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். வெஸ்லி சோ 12½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.பெண்கள் பிரிவு: இந்திய வீராங்கனைகள் மோதிய ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பியை வீழ்த்தி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

Jun 03, 2026

இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: உலகக்கோப்பை ஒளிபரப்பு உரிமை உறுதி!

ஒப்பந்தம்: இன்னும் 10 நாட்களில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவுக்கான ஒளிபரப்பு உரிமத்தை FIFA உறுதி செய்துள்ளது.விலைக்குறைப்பு: ஆரம்பத்தில் 835 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட இதன் மதிப்பு, தற்போது சுமார் 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் போட்டிகளை டிவியில் தடையின்றி ரசிக்கலாம்.

Jun 02, 2026

கிரிக்கெட்டில் ரூ. 55 லட்சம் பரிசுகளை வாரிக்குவித்த இளம் புயல்,15 வயது வைபவ் சூர்யவன்ஷி:,

ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் லீக் தொடரில் 776 ரன்கள் (72 சிக்சர், 63 பவுண்டரி, ஸ்டிரைக் ரேட் 237.30) குவித்து அசத்தியுள்ளார்.வென்ற விருதுகளும் பரிசுகளும் (மொத்தம் ரூ. 55 லட்சம் + கார்):ஆரஞ்ச் கேப் (அதிக ரன்) – ரூ. 10 லட்சம்வளர்ந்து வரும் சிறந்த வீரர் – ரூ.  10 லட்சம்சூப்பர் ஸ்ட்ரைக்கர் – ரூ.  10 லட்சம்அதிக சிக்சர் – ரூ.  10 லட்சம்அதிக மதிப்புமிக்க வீரர் (MVP) – ரூ. 15 லட்சம்பாராட்டு மழை: "இவரை அயர்லாந்துக்கு எதிரான இந்திய டி-20 அணியில் சேர்க்க வேண்டும்" என முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் வலியுறுத்தியுள்ளார். மேலும், "சச்சின், கோலி, கபில் தேவ் போன்றவர்களின் ஆட்ட மனநிலை இவரிடம் உள்ளது; நூறாண்டுக்கு ஒருமுறை தோன்றும் வீரர்" என முன்னாள் வீரர் மதன் லால் பாராட்டியுள்ளார்.

Jun 02, 2026

சர்வதேச டேபிள் டென்னிஸ்: இரட்டை கோப்பை வென்று இந்தியாவின் திவ்யான்ஷி சாதனை!

கொசோவாவில் நடந்த WTT பீடர் டேபிள் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் 15 வயது வீராங்கனை திவ்யான்ஷி இரண்டு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.ஒற்றையர் பிரிவு: விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் தொடரின் 'நம்பர்-1' வீராங்கனையான யே இ தியானை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனார்.இரட்டையர் பிரிவு: பெண்களுக்கான இரட்டையர் இறுதிப்போட்டியில் திவ்யான்ஷி - சிண்ட்ரெல்லா ஜோடி, பலத்த போராட்டத்திற்குப் பின் ஜப்பானிய ஜோடியை 3-2 (11-7, 12-14, 14-12, 8-11, 11-7) என்ற கணக்கில் வீழ்த்தி தங்கக் கோப்பையைத் தட்டிச் சென்றது.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 158 159

AD's



More News