25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


விளையாட்டு (SPORTS)

Sep 10, 2024

காதுகேளாதோர் துப்பாக்கி சுடுதலில் ஜெர்மனியில் இந்தியா வென்ற21 பதக்கம்.

உலக காதுகோளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ஜெர்மனியில் நடந்தது. 16 நாடுகளை சேர்ந்த 70 பேர் 16 வகையான பிரிவுகளில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 13 பேர் விளையாடினர். இத்தொடரில் 7 தங்கம் 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தை தட்டிச் சென்றது. இந்தியா சார்பில் அபினவ் தேஷ்வால், அதிக பட்சமாக 5 பதக்கம் ஒரு தங்கம்,- 4 வெள்ளி வென்றார், மஹித் சாந்து, 4 பதக்கம் -3 தங்கம், 1 வெள்ளி கைப்பற்றினார். தனுஷ் ஸ்ரீகாந்த் 2 தங்கம், அனுயா பிரசாத் சவுரியா சைனி தலா ஒரு தங்கம் வென்றனர்.

Sep 10, 2024

பாரிஸ் பாராலிம்பிக் நிறைவு விழா அணிவகுப்பில் இந்தியா விளையாட்டு வீரர்கள்.

பாரிஸ் பாராலிம்பிக்கில் அசத்திய இந்தியா 29 பதக்கம் வென்றது நேற்றைய நிறைவு விழா அணிவகுப்பில் மூவர்ணக் கொடி ஏந்தி வந்த ஹர்விந்தர், பிரீத்தி உள்ளிட்ட இந்திய விளையாட்டு குழுவினர்.

Sep 09, 2024

இந்திய வீரர் நவ்தீப் சிங்கிற்கு தேடிவந்த தங்கம்

 இந்திய வீரர் நவ்தீப் சிங் ஈட்டி எறிதலில் 47.32 மீட்டர் தூரம் எறிந்த இவர் இரண்டாவது இடத்துக்கான வெள்ளி தான் வென்றார். ஆனால் முதலிடம் பிடித்த ஈரானின் பெய்ட் சாயா சதேக் 47.64 மீட்டர் தகுதி நீக்கம் செய்யப்பட, நவ்தீப் சிங்கிற்கு தங்கம் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த மகிழ்ச்சியில் சிவப்பு நிறத்தில் அரேபிய மொழியில் வாசம் எழுதப்பட்ட கொடியை எடுத்து காண்பித்தார். தங்களது நாட்டுக் கொடியை காண்பிப்பது தவறு இதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பாராலிம்பிக் விதியை மீறிய சதேக். தங்கத்தை பரிதாபமாக இழந்தார். 

Sep 09, 2024

பாராலிம்பிக்கில் 29 பதக்கம் வென்று 18ம் இடம் பிடித்துஇந்தியா சாதனை

தடகளம் -தங்கம் 4, வெள்ளி 6, வெண்கலம் 7 பாட்மின்டன் - தங்கம் 1 வெள்ளி 2, வெண்கலம் 2 துப்பாக்கி சுடுதல் - தங்கம் 1, வெள்ளி 1, வெண்கலம் 2 வில்வித்தை - தங்கம் 1, வெள்ளி 0, வெண்கலம் 1 ஜீடோ - தங்கம் 0, வெள்ளி 0, வெண்கலம் 1ஆக மொத்தம் 29 பதக்கங்களை இந்திய விளையாட்டு வீரர்கள் பெற்றுள்ளனர்.

Sep 09, 2024

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் சீனாவை வீழ்த்தியது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணி ,அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 14-வது நிமிடத்தில் ஜீக்ராஜ் துல்லியமாக பந்தை பாஸ் செய்தார். இதை கச்சிதமாக பெற்ற சுக்ஜீத் சிங் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்க சீன வீரர்கள் முயற்சித்தனர். ஆனால் இந்தியாவின் புதிய  கோல் கீப்பர் கிருஷ்ணன் பதக் அலர்ட் ஆக இருந்தார் எதிரணியின் வாய்ப்புகளை துடிப்பாக தடுத்தார். இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

Sep 07, 2024

பாரா ஒலிம்பிக் மாற்றுத் திறனாளிகளுக்கான பதக்கங்கள்

உயரம் தாண்டுதலில் பிரவீன்குமார் தங்கப் பதக்கம் வென்றார்.]பாராஒலிம்பிக்கில் ஆண்களுக்கான் உயரம் தாண்டுதலில் 164 பிரிவில் இறுதி சுற்றில் 6 வீரார்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் நொய்டாவைச் சேர்ந்த பிரவீன்குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த பிரவீன்குமார். இந்த முறை அதை தங்கமாக மாற்றி அசத்தியிருக்கிறார்.பாராஒலிம்பிக்கில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார்..     

Sep 07, 2024

கால்பந்து அரங்கில் 900 கோல் ரொனால்டோ சாதனை

ஐரோப்பிய கால்பந்து அணிகள் மோதும் நேஷன்ஸ் லீக்தொடர் நடக்கிறது. போர்ச்சுக்கலின்லிஸ்பன் நகரில் குருப் 1 போட்டி நடந்தது. இதில் போர்ச்சுக்கல் குரோஷிய அணிகள் மோதின 7வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் வீரர் தியாகோ தலாட் ஒரு கோல் அடித்தார். 34வது நிமிடத்தில் மெண்டெஸ் துல்லியமாக கொடுத்த பந்தை பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோலாக மாற்றினார். இது போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 131 வது கோல், இத்துடன் கிளப் அரங்கில் 739 என சேர்த்து ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் 900 கோல் அடித்த முதல் வீரர் ஆனார். 

Sep 07, 2024

டைமண்ட் லீக் தொடரின் பைனலில் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் தடகளதின் 15-வது சீசன் தற்போது நட க்கிறது. 2024-ல் உலகின் 14 இடங்களில் போட்டி நடந்தன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட டாப் 6 நட்சத்திரங்கள் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடக்கவுள்ள டைமண்ட் லீக் பைனலில் செப்டம் பர் 13-14 பங்கேற்க தகுதி பெற்றனர்.இதற்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார். 2024 சீசனில் தோகா, லாசேன் என இரு டைமண்ட் லீக் தடகளத்தில் மட்டும் இவர் பங்கேற்றிருந்தார். இந்த இரு போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா மொத்தம் 14 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்தார்.

Sep 06, 2024

பாராலிம்பிக் கிளப் த்ரோ போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்தார் தரம்பிர்.

இடுப்புக்கு கீழ் பகுதி பாதிக்கப்பட்டு, கால் கைகளில் அதிக பலம் இல்லாதவர்கள் உட்கார்ந்த நிலையில் போட்டியில் பங்கேற்பவர் மரத்தினால் ஆன சுமார் 35 முதல் 39 செண்டி மீட்டர் நீளம் 6 செண்டி மீட்டர் அகலம் கொண்ட நீண்ட உருளை வடிவ கிளப்பை எறிவர்.இந்தப் போட்டியில் தரம்பிர்.34.92 மீட்டர் தூரம் எறிந்து முதல் தங்கம் வென்றார். இரண்டாவது பரிசாக பிரனவ் 34.59 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

Sep 05, 2024

ஹாட்ரிக் பதக்கம் - வரலாறு படைத்தார் மாரியப்பன் தங்கவேலு

பாரிஸ் பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு. 1.85 மீட்டர் உயரம் தாண்டி அசத்தல். சேலம் மாவட்டத்தில் பெரியவடகம்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்தவர். 2016ல் தங்கம், 2020ல் வெள்ளி, 2024ல் வெண்கலம் என பாராலிம்பிக்ஸில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 32 33

AD's



More News