டபிள்யு. டி.ஏ., 'பைனல்ஸ்' டென்னிஸ் தொடர் சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் ,உலகின் 'டாப்-8' வீராங்கனைகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றனர்.இதன் 'ஸ்டெபி கிராப்' பிரிவில் உலகின் 'நம்பர் -1' சபலென்கா (பெலா ரஸ்), 'நடப்பு சாம்பியன்' கோகோ காப் (அமெ ரிக்கா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஜாஸ்மின் பாவோலினி (இத்தாலி) இடம் பெற்றுள்ளனர்.முதல் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சகவீராங்கனை ஜெசிகா பெகுலாவிடம் தோல்வியடைய, இரண்டாவது போட்டியில் கோகோ காப், ஜாஸ் மின் பாவோலினியை 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று,முதல் வெற்றியைபதிவு செய்தார்.2வது மற்றொரு போட்டியில் அரினா சபலென்கா 6-4, 2-6, 6-3 என ஜெசிகா பெகுலாவை தோற்கடித்து, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவுசெய்தார்.
நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. ஆக்லாந்தில் நேற்று நடந்த முதல் போட்டியில் 'டாஸ்' வென்று நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர், பீல்டிங் தேர்வு செய்தார்.வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி 17 ஓவரில் 109/9 ரன் எடுத்தது. கடைசி 18 பந்தில் 56 ரன் தேவைப்பட்டன. கடைசியில் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 157/9 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில் மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தன.உலக சாம்பியன் குகேஷ், கஜகஸ்தானின் நோகெர்பெக் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது.நேற்று இரண்டாவது போட்டியில் குகேஷ் , துவக்கத்தில் தடுமாறிய போதும், 59வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். குகேஷ்,1.5-0.5 என வென் று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.இந்தியாவின் அர்ஜுன்,மற்றொரு போட்டியில் ,பல்கேரியாவின் மார்டின் பெட்ரோவை வீழ்த்தினார். 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.,) ,சர்வதேச ' டி -20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை துபாயில் வெளியிட்டது. இந்தியாவின் அபிஷேக் சர்மா,பேட்டர் தரவரிசையில் 925 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.மற்ற இந்திய வீரர்களான திலக் வர்மா (788 புள்ளி, 3வது இடம்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (696 புள்ளி, 8வது இடம்) 'டாப்-10' பட்டியலில் உள்ளனர்.இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ,பவுலர் பட்டியலில் 799 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். மற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் (625), அக்சர் படேல் (617) முறையே 15, 17வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா ,'ஆல்-ரவுண்டர்' தர வரிசையில் (219) 2வது இடத்தில் இருந்து ,4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜிம்பாப்வேயின்சிக்கந்தர் ராஜா (251) 2வது இடத்துக்கு முன்னேறினார்.
நவி மும்பையில் நடந்த பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பெண்கள் உலக கோப்பை தொடரில் முறையாக முதன் சாம்பியன் ஆகி புதிய வரலாறு படைத்தது.இந்திய அணி வீராங்கனைகள், தாஜ் ஓட்டலில் தங்கி, நேற்று மாலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.வீராங்கனைகள் அனைவரும் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) 'லோகோ' பொறித்த, 'நேவி புளு' நிறத்தினால் ஆன 'கோட்', 'சூட்' அணிந்தருந்தனர். உலக கோப்பை தொடரில் அரையிறுதி, பைனலில் பங்கேற்று, கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த துவக்க வீராங்கனை ஷைபாலி வர்மா, காலில் காயமடைந்த பிரதிகா, வீல் சேருடன் வந்திருந்தார்.உலக கோப்பையை ஹர்மன் பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, மோடியிடம் வழங்கினர். மோடியை குறிக்கும் வகையில், 1ம் எண் கொண்ட, 'நமோ' என்ற பெயர் பொறித்த, நீல நிறஜெர்சியை வழங்கினர். இதில் இந்திய அணி வீராங்கனைகள் அனை வரும் கையெழுத்திட்டு இருந்தனர். வீராங்கனை களுக்கு பிரதமர் மோடி பாராட்டுதெரிவித்தார். தங்களது வெற்றி அனுப வங்களை வீராங்கனைகள் பகிர்ந்துகொண்டனர்.
நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை பைனலில் (50 ஓவர்), இந்திய அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36, முக்கிய காரணம். இவரது தந்தை ஹர்மந்தர் சிங் புல்லாருக்கு கிரிக்கெட், கால்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தது. பின் பஞ்சாப் மோகா நகர கோர்ட்டில் கிளார்க் பணியில் 'செட்டில்' ஆனார். தந்தை பயிற்சி அளிக்க, இளம் வயதிலேயே ஹர்மன் பிரீத், கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். தற்போது 'உலகை' வென்று உச்சம் தொட்டுள்ளார். கிரிக்கெட் பற்றி அதிகம் அறியாத ஒருவர், நம் நாட்டின் பெண்கள் கிரிக்கெட்டில் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கனவு கண்டது பெரிய விஷயமல்லவா. தனிப்பட்ட முறையில் உலக கோப்பை வென்ற தருணம் மிகவும் உணர்ச் சிகரமானது. கிரிக்கெட் விளையாட துவங்கிய நாளில் இருந்து உலக கோப்பை வெல்வதே கனவாக இருந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தால், கோப்பையை 'மிஸ்' செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் எனகூறினார்.உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளை பிரதமர் மோடி நேரில் அவரது டில்லி வீட்டில் இன்று மாலை சந்தித்து ,பாராட்டு விழா நடக்க உள்ளது. இதற்காக ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட இந்திய அணியினர், மும்பையில்இருந்து தனி விமானம் மூலம் நேற்று டில்லி வந்தனர்.
செஸ் உலக கோப்பை 11வது சீசன் கோவாவில் மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று துவங்கியது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடுகின்றனர்.முதல் போட்டியில் பல்கேரியாவின் மார்டின் பெட்ரோவை, இந்தியாவின் அர்ஜுன், 37 வது நகர்த்தலில் வெற்றிபெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் லாரா (814 புள்ளி), 2 இடம் முன்னேறி, முதலிடம் பிடித்தார்.17 புள்ளியை இழந்த இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (811) 2வது இடம் பெற்றார். 9 இடம் முன்னேறிய இந்தியாவின் ஜெமிமா (658), ,டாப்-10' பட்டியலில் இடம் (10 வது) பிடித்தார்.இந்தியாவின் தீப்தி (657), பவுலர் தரவரி சையில் 5வது இடத்தில் நீடிக்கிறார்.ஐ.சி.சி., சார்பில் பெண்கள் உலக கோப்பை கனவு அணி வெளியிடப்பட்டது. இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்த ஹர்மன்பிரீத் கவுருக்கு இடமில்லை.இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்தி சர்மா என மூவர் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் லாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை பைனலில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி ,(50 ஓவர்) இந்திய அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.கடைசிதருணத்தில் தீப்தி சர்மா ஓவரில் தென் ஆப்ரிக்கா வின் டி கிளர்க் அடித்தபந்தை ஹர்மன்பிரீத் கவுர் 'கேட்ச்' பிடித்தது, இந்தியாவின் கோப்பை கனவை நனவாக்கியது. உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகள், 'எங்கள் மூவர்ணக் கொடி உயரே பறக்கும், நாம் ஒன்றாக எழு வோம், ஒன்றாக செயல்படுவோம், ஒன்றாக வெல்வோம், வீ ஆர் டீம் இந்தியா,' என,வெற்றி கீதம் பாடினர்.
உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இந்திய பெண்கள் அணிக்கு, இந்திய பி.சி.சி.ஐ கிரிக்கெட் போர்டு சார்பில் ரூ. 51 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை (50 ஓவர் ) பைனலில் ஆட்ட நாயகி விருது வென்ற இளம் வீராங்கனையானார் (21 ஆண்டு, 278 நாள்) இந்தியாவின் ஷைபாலி வர்மா.உலக கோப்பை (ஒருநாள் போட்டி ) வென்ற இந்திய கேப்டன்கள் கபில்தேவ் (1983). தோனி (2011). பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (2025).