ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் வங்கதேசத்தின் தாகாவில், காம்பவுண்டு கலப்பு அணிகளுக்கான போட்டி நடந்தது.இந்தியாவின் அபிஷேக், தீப்ஷிஹா இடம் பெற்ற அணி காலிறுதியில் 159–155 என வியட்நாமை வென்றது. அடுத்து நடந்த அரையிறுதி யில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின.இந்திய அணி 156-153 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 'ரீகர்வ்' கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அன்ஷிகா குமாரி, யாஷ் தீப் சஞ்சய் ஜோடி, 0–6 என சீன தைபே ஜோடி யிடம்தோல்வியடைந்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை தென் கொரியாவை சந்திக்க உள்ளது.
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் எகிப்தின் கெய்ரோவில் ,ஆண்களுக்கான 'ரைபிள் 3' பொசிசன்ஸ் பிரிவில் தகுதிச்சுற்று நடந் தது. இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங், 'நீலிங்' (200), 'புரோன்' (200) பிரிவில் முழு புள்ளி பெற்றார். அடுத்து 'ஸ்டாண்டிங்' பிரிவில் (197) மொத்தம் 597 புள்ளி பெற்று, முதலிடம் பெற்றார். உலக சாதனையை சமன் செய்தார்.மற்றொரு இந்திய வீரர் நீரஜ் குமார் (592) 5வது இடம் பெற, இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.பைனலில் ஐஸ்வரி பிரதாப் சிங் (466.9) 0.2 புள்ளி வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை நழுவவிட்டார். சீனாவின் யுகுன் லியு (467.1) தங்கம் வென்றார். நீரஜ் (432.6) 5வது இடம் பிடித்தார். இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என, 11 பதக்கத்துடன் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா நீடிக்கிறது.
உலக கோப்பை செஸ் 1வது சீசன் கோவாவில். மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர்.உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், 3வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, பிரனவ், கார்த்திக் வெங்கடராமன் என 5 வீரர்கள்,நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.அர்ஜுன், ஹங்கேரியின் பீட்டர் லெகோவை, நேற்று துவங்கிய நான்காவது சுற்றில்சந்தித்தார். போட்டி துவங்கிய ஒரு மணி நேரத்தில் இருவரும் 'டிரா' செய்ய சம்மதித்தனர். ஸ்கோர் 0.5-0.5 என சமனில் உள்ளது.பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் டேனில் டுபோவை எதிர்கொண்டு துவக்கத்தில் பின் தங்கிய பிரக்ஞானந்தா, 41 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். பிரனவ்-உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக், ஹரிகிருஷ்ணா - சுவீடனின் கிரான்டெலியஸ், கார்த்திக்வெங்கடராமன்-சீனாவின் லியம் லீ மோதிய முதல் போட்டிகள் நான்காவது சுற்றில் 'டிரா' ஆகின.
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் வங்கதேசத்தின் தாகாவில் ,தனிநபர் பெண்களுக்கான நடக்கிறது. தனிநபர் பெண்களுக்கான ரீகர்வ் பிரிவு போட்டி நடக்கின்றன. காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, 7-3 என தென் கொரியாவின் லீ காயுனை வீழ்த்தினார். இந்தியாவின் அன்கிதா, மற்றொரு போட்டியில் 6-4 என தென் கொரியாவின் ஜன் மிங்கியை சாய்த்தார். இந்தியாவின் சங்கீதா, 7-1 என ஈரானின் ஜாரேவை வென்றார். மூவரும் அரையிறுதிக்கு முன்னேறினர். இந்தியாவின் திராஜ் பொம்மதேவரா,தனிநபர்ஆண்களுக்கான ரீகர்வ், பிரிவு காலிறுதியில் ,6-5 என கஜகஸ்தானின் சடிகோவை வென்றார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ராகுல் 6-2 என சீன தைபேவின் லீன் சியாங்கை சாய்த்தார்.
இந்தியாவின் ஜோதி தனிநபர் பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு காலிறுதியில் 147 -145 என தென் கொரியாவின் யூக்யுனை வீழ்த்தினார். மற்றொரு போட் டியில் இந்தியாவின் பிரித்திகா 148-146 என சக வீராங்கனை சிகிதாவை வென்றார்.இந்தியாவின் அபிஷேக், பிரதமேஷ், சாஹில் ராஜேஷ் அடங்கிய அணி ஆண்களுக்கானகாம்பவுண்டு அணிகள் பிரிவில் பங்கேற்றது. காலிறுதியில் 235-234 என மலேசியாவைவீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, தாய்லாந்து மோதின.இப்போட்டி 235-235 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் ஆப்பில்' இந்திய ஆண்கள் அணி, பைனலுக்கு முன்னேறியது. நாளை கஜகஸ்தானை சந்திக்க உள்ளது.இந்திய பெண்கள் அணி காலிறுதியில்'ரீகர்வ் பிரிவில் உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. அன்ஷிகா குமாரி, அன் கிதா, சங்கீதா இடம் பெற்ற இந்திய அணி, 4-4 என சமன் செய்தது. பின் நடந்த 'ஷூட் ஆப்' முறையில் இந்தியா 24-27 என தோற்றது.
ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் 'கோல்டு லெவல்' தொடர் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் மென்னா ஹமீதுவை எதிர்கொண்டார்.முதல் செட்டை 11-6 என வென்றார்அடுத்த இரு செட்டுகளையும் 11-8, 11-3 என வசப்படுத்தினார். முடிவில் அனாஹத், 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் அனாஹத், எகிப்தின் மற்றொரு வீராங்கனை சனா இப்ராஹிமை சந்திக்க உள்ளார். இந்தியாவின் வேலவன், செந்தில்குமார் 0-3 என்ற செட் கணக்கில் (8–11, 12-14, 6-11), ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ,எகிப்தின் முகமதுவிடம் தோல்வியடைந்தார். இந்திய வீரர் அபே சிங், மற்றொரு போட்டியில் , 0-3 (8-11, 7-11, 4-11), பிரான்சின் பாப் சிஸ்டேவிடம்தோல்வியடைந்தார்.
எகிப்தில், உலக துப் பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்'/'பிஸ்டல்') தொடர் எகிப்தில், ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் சாம்ராட் ராணா (586.27 புள்ளி), வருண் தோமர்(586.26) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.பைனலில் சாம்ராட், 243.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றார் . மூன்றாவது இடம் பிடித்த வருண் (221.7) வெண்கலம் கைப்பற்றினார். 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் ஆண்கள் அணிகளுக்கான ,சாம்ராட், வருண், ஷர்வன் குமார் அடங்கிய இந்திய அணி 1754.69 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, தங்கம் வென்றனர். 25மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' ஆண்களுக்கான பைனலில், அனிஷ், 28 புள்ளிகளு டன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் பெண்கள் அணிகளுக்கான ,ஈஷா சிங் (583.25), மனு பாகர் (580.20), சுருச்சி இந்தர் சிங் (577.17) அடங்கியஇந்திய அணி 1740.62 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது.
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் வங்கதேசத்தின் தாகாவில் ,ஆண்கள் அணிகளுக்கான ரீகர்வ்' பிரிவில் இந்தியா சார்பில் அடானு தாஸ், ராகுல், யாஷ்தீப் சஞ்சய் இடம் பெற்ற அணி பங்கேற்கிறது.காலிறுதியில் மலேசியாவை 6-0 என வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய அணி, இல்பாத், தஸ்டன், அலெக்சாண்டர் அடங்கிய கஜகஸ்தான் அணியை 5-3 என்ற கணக்கில்வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இந்தியாவின் தீபிக் ஷா, ஜோதி, பிரித்திகா அடங்கிய அணி ,பெண்களுக்கான காம் பவுண்டு அணிகள் பிரிவில் பங்கேற்றது. காலிறுதியில், 235-225 என வியட்நாம் (கிம் ஆன், நிகுயேன், பம் வான்) அணியை வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, வங்க தேசம் (போன்னா, குல்சும், புஸ்பிதா) மோதின.இதில் இந்திய அணி 234-227 என வென்று, பைனலுக்கு (நவ. 13) முன்னேறியது. இதில் தென் கொரியாவிடம் மோத உள்ளது. ஆண்கள் அணிதென்கொரியாவை (நவ. 14) சந்திக்க உள்ளது.
ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (11050 புள்ளி) 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார். இவர், ஏ.டி.பி., பைனல்ஸ் 3 தொடரின் லீக் போட்டியிலும் வெற்றி பெற்றால், ஆண்டு இறுதியில் வெளியாகும் ஏ.டி.பி., தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.இத்தாலியின் ஜானிக் சின்னர் (10000) 2வது இடம். ஜெர்மனியின் ஸ்வெரேவ் (4960) 3வது இடம். செர் பியாவின் ஜோகோவிச் (4830) 4வது இடம்.அமெரிக் காவின் பென் ஷெல்டன் (3970) 5வது இடத் தில் உள்ளனர்.
தாய்லாந்தில் நடக்கவுள்ள பெண்களுக்கான (20 வயது) ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன், தகுதிச் சுற்றில் 33 அணிகள் பங்கேற்றன. 20 ஆண்டு களுக்கு பின் ஆசிய கோப்பையில் 'டி' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, 3 போட்டி யில், 2 வெற்றி, ஒரு 'டிரா' என 7 புள்ளிகளுடன், பட்டியலில் முதலிடம் பிடித்து,விளையாடும் வாய்ப்பை பெற்றது.தாய்லாந்தின் பாங்காக்கில், நேற்று அணிகளுக்கான பிரிவு ('டிரா') தேர்வு12 அணிகள் 3 பிரிவுகளாக நடந்தது. மொத்தம் பிரிக்கப்பட்டன. இதில் 6 ஆசியாவின் 'நம்பர்-1' முறை கோப்பை வென்ற, அணி, நடப்பு சாம்பியன் ஜப்பான், வலிமையான ஆஸ்திரேலியா, சீன தைபே அணிகள் இடம் பெற்றுள்ளன.இந்திய அணி 'குரூப் ஆப் டெத்' என்றழைக் கப்படும் 'சி' பிரிவில் இடம் பிடித்தது.