துப்பாக்கி சுடுதலில் 'வெண்கலம்’ வென்ற மேகனா சஜ்ஜனார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் சீனாவில், பெண்க ளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் மேகனா சஜ்ஜனார், 632.6 புள்ளி களுடன் 7வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார்.அடுத்து நடந்த பைனலில் மேகனா, 230.0 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
உலக கோப்பை வரலாற்றில் மேகனா கைப்பற்றிய முதல் பதக்கம் ஆனது. இது, இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே ஈஷா சிங் (10 மீ., 'ஏர் பிஸ்டல்') தங்கம் வென்றிருந்தார்.
இம்முறை ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என, 2 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 5வது இடத்தை கைப்பற்றியது.
0
Leave a Reply