APRIL 22-ம் தேதி லக்னோவில், டெல்லி, லக்னோ அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 159/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 161/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக MUKESH KUMAR தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் தமிழ்நாடுகிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் தேசிய மற்றும் சர்வதேச போட்டியில் சிறந்து விளங்கும் தமிழக இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தாகை வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊக்கத் தொகைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த அபிநந்த் கபிள்டென்னிஸ்), வெனிசாஸ்ரீ (வில்வித்தை), முத்துமீனா வல்லச்சாமி (பாரா தடகளம்), ஷமீனா ரியாஸ் (ஸ்குவாஷ்), ஜயந்த், நந்தனா இருவரும் கிரிக்கெட்), கமலி (அலைச்சறுக்கு , அபிநயா, ஜித்தின் அர்ஜூனன் இருவரும் தடகளம்).தக்க்ஷந்த் (செஸ்) ஆகியோருக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்கினார். இது அருமையான் திட்டம் என்று பாராட்டி, ஷிவம் துபே தனது சொந்த பணத்தில் இருந்து ,ஒவ்வொவருக்கும் தலா ரூ.70 ஆயிரம் விதம் மொத்தம் ரூ.7 லட்சமும் வழங்கினார்.விழாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக இயக்குனர் கே.எஸ்.விஸ்வ தன், தமிழ்நாடு கிரிக்கெட்சங்கசெயலாளர் ஆர்.ஐ.பழனி, -உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தியாவின் சிம்ரன்பிரீத் கவுருக்கும், சீனாவின் யுஜ்லி சன்னுக்கும் டையே கடும் போட்டி நில வியது 9-வது சுற்று நிறைவில் புஜ்லி சன் ஒரு புள்ளி வித்தி யாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதனால் கடைசி ரவுண்ட் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த ரவுண்டில் இருவரும் தலா 3 புள்ளிகள் எடுத்தனர். முடிவில் யுஜிலி சன் 34 புள் ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.சிம்ரன்பிரீத்கவுர் 33புள்ளிகளுடன் 2 வதுஇடத்தைபெற்றுவெள்ளிப்பதக்கத்தைசொந்தமாக்கினார்.இந்தபோட்டியில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கத்துடன் 3 வது இடத்தை பெற்றது.
APRIL 21-ம் தேதி கொல்கத்தாவில், குஜராத், கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 198/3 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 159/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SHUBMAN GILL தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவின் ஹம்பி, திவ்யா தேஷ்முக், வைஷாலி, ஹரிகா துரோணவள்ளி உட்பட 10 பேர் பங்கேற்கும். சர்வதேச செஸ் கூட்டமைப்பு('பிடே) சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' தொடர் நடத்தப்படுகிறது. இதன் 5ம் கட்ட போட்டிகள் புனேயில் நடக்கிறது. ஏழாவது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, சீனாவின் ஜு ஜினெர் மோதினர். ஹம்பி, 55வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஏழு சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் ஹம்பி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். சீனாவின் ஜூ ஜினெர் (5.0 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரஷ்யாவின் போலினா ஷுவலோவா(4.0 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார். ஹரிகா, திவ்யா (தலா 3.5 புள்ளி) 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். வைஷாலி (3.0) 6வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
28வது தேசிய பெடரேஷன் சீனியர் தடகள போட்டி கேரள மாநிலம் கொச்சியில், பெண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் தமிழகத்தின் பவித்ரா, அதிகபட்சமாக 4.00 மீ., தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.மற்றொரு தமிழக வீராங்கனை பரானிகா (4.00 மீ.,) வெள்ளி வென்றார். ஹரியானாவின் வன்ஷிகா (3.90 மீ.,) வெண்கல பதக்கத்தை தட்டிச் வென்றார்.
15,17 வயதுக்குட்பட்.டோருக்கான ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ஜோர்டனில், ஆண்களுக்கான 17 வயதுக்குட் பட்டோருக்கான போட்டிகள் நடக்கின்றன. இதன் 52 கிலோ பிரிவு முதல்சுற்றில் இந்தியாவின் திகம் சிங், ஐக்கிய அரபு எமிரேட்சின் (யு.ஏ.இ.,) அலி ,அல்மெஸ்மாரி மோதினர். இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு போட்டியில் தங்கம் வென்ற திகம் சிங், துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினர். போட்டியை பாதியில் நிறுத்திய நடுவர், திகம் சிங் வெற்றி பெற்றதாக அறிவித்தார். ஜோர்டனில்ஆண்களுக்கான 17 வயதுக்குட் பட்டோருக்கான போட்டியில்தங்கம் வென்றஇந்தியாவின் திகம் சிங்பின்,57 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராகுல் காரியா, சீனதைபேயின் லி ஷோசூன் மோதினர். இந்திய வீரரின் தாக்குதலை முடியாமல் சமாளிக்க சீன தைபே வீரர் திணறியதால், போட்டியை பாதியில் நிறுத்திய 'ரெப்ரி', ராகுல் காரியா வென்றதாக அறிவித்தார்.
ஸ்குவாஷ் .உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர்அமெரிக்காவின் சிகாகோவில், வரும் மே 9,17நடக்க உள்ளது.இதற்கான ஆசிய தகுதிச் சுற்று, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இந்தியாவின் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் அனாஹத் சிங், ஹாங்காங்கின் டோபி சேமோதினர். இதில் அனாஹத் 3-1(11-4, 9-11, 11-2, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.இந்தியாவின்ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ,வீர்சோட்ரானி, மலேசியாவின் அமீஷன்ராஜ் சந்திரன் மோதினர். வீர்சோட் ரானி 3-0 (11-3, 11-4, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.அனாஹத், வீர் சோட்ரானி, தகுதிச் சுற்று பைனலில் உலக சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முறையாக களமிறங்க உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கு இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அபே சிங், ரமித் டான்டன், நேரடியாக தகுதி பெற்றிருந்தனர். துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் பெருவில், தொடர் ஆண்களுக்கான தனிநபர் 10 மீ.,'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா வின் ருத்ராங்க் ஷ்பாலா சாகேப் பாட்டீல்(632.0 புள்ளி), அர்ஜுன் பாபுதா(631.9) 3,4 வதுஇடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.10மீ.,'ஏர் ரைபிள்' பிரிவு பெண்களுக்கான தனி நபர் தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆர்யா போர்ஸ் 633.56 புள்ளிகளுடன்,2வதுஇடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். இந்திய வீராங்கனைகளான நர்மதா நிதின் ராஜு (627.6), சோனம் (623.5) முறையே 16, 30வதுஇடம் பிடித்தனர். அடுத்து நடந்த பைனலில் ஆர்யா, 188.1 புள்ளிகளுடன் 5வதுஇடம் பிடித்தார்.இதுவரை 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ஈட்டி எறிதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள சவுதி அரேபியாவில் சாம்பியன்ஷிப் 6வது சீசன் நடந்தது.ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இந்தியாவின் ஹிமான்சு, 67.57 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். 18 வயது ஆசிய சாம்பியன் ஷிப் ஈட்டி எறிதலில் இந்தியா கைப்பற்றிய முதல் தங்கம்..இந்தியாவின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் 2.03 மீ., தாவிய தேவக் புசான், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.'மெட்லே ரிலே ' ஓட்டம் .ஆண்களுக்கான 'மெட்லே ரிலே 'ஓட்டம் நடந்தது. இதன்படி முதல் வீரர் 100 மீ., அடுத்த வீரர் 200 மீ.,3வது வீரர் 300 மீ., கடைசி வீரர் 400 மீ., துாரம்(மொத்தம் 1000 மீ.)ஓடுவர். இந்தியா சார்பில் சிராந்த், சையது சபீர், சாகேத் மின்ஜி,காதிர்கான் அடங்கிய அணிபங்கேற்றது. 1நிமிடம்,52.15 வினாடி நேரத்தில் வந்து இரண்டாவது இடம்பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.இந்திய பெண்கள் அணியினர், இரண்டாவது இடத்தில் 'பேடன்'மாற்றிய போது, கீழே தவறவிட்டதால் போட்டியை முடிக்காமல் வெளியேறினர். இந்திய அணி1 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் வென்றது.
19 TH APRIL IPL MATCH GUJARAT 19-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத், டெல்லி, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 203/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 204/3, ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக JOS BUTTLER தேர்ந்தெடுக்கப்பட்டார்.19-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான், லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 178/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி 180/5, ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக AVESH KHAN தேர்ந்தெடுக்கப்பட்டார்.20 TH APRIL IPL பஞ்சாப் - BENGALORE 20-ம் தேதி நியூசண்டிகரில்,, பஞ்சாப், பெங்களுர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 157/6 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பெங்களுர் அணி 159/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக VIRAT KOHLI தேர்ந்தெடுக்கப்பட்டார்.20 TH APRIL IPL சென்னை-மும்பை20-ம் தேதி மும்பையில், சென்னை-மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 176/5 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 177/1 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ROHIT SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
APRIL 18-ம் தேதி பெங்களூரில், பஞ்சாப், பெங்களூர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 95/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 98/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக TIM DAVID தேர்ந்தெடுக்கப்பட்டார்.