உலக சாம்பியன்ஷிப், உயரம் தாண்டுதலில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என சாதனை படைத்தசர்வேஷ் அனில் குஷாரே.
உலக தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன்ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், . உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 49 போட்டிகளில் 149 பதக்கம் வழங்கப்பட உள்ளன. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிச்சுற்றில் 2.25 மீ., உயரம் தாண்டிய சர்வேஷ் அனில் குஷாரே, உலக சாம்பியன்ஷிப், உயரம் தாண்டுதலில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என சாதனை படைத்தார்.
ஆண்களுக்கான 100 மீ., ஓட்டம் பைனலில் ,ஜமைக்காவின் ஆப்ளிக்யு செவில்லே, 9.77 வினாடி நேரத்தில் வந்து தங்கம் ,மற்றொரு ஜமைக்க வீரர் கிஷேன் தாம்ப்சன் (9.82 வினாடி) வெள்ளி வென்றார்.
ஆண்களுக்கான 10,000 மீ., பைனலில் ,இந்திய வீரர் குல்வீர் சிங், 29 நிமிடம், 13.33 வினாடி நேரத்தில் வந்து, 16வது இடம் பிடித்தார்.
0
Leave a Reply