மதுரையில் ஹெலிகாப்டர் சேவை.
மதுரையை மையமாகக் கொண்டு ராமேசுவரம், கொடைக்கானல், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு தனியார் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரப் பயணத்துக்கு ரூ.1.60 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணத்தில் அதிகபட்சம் 5 பேர் வரை செல்லலாம்.
சுற்றுலா மட்டுமின்றி, வணிகப் பயணங்கள் மற்றும் மருத்துவ அவசரத் தேவைகளுக்கும் இந்தச் சேவை பயன்படுத்தப்பட உள்ளது.
0
Leave a Reply