APRIL 14TH விளையாட்டு போட்டிகள் .
வில்வித்தை,
உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் - 1') தொடர் அமெரிக்காவில் ஆண்கள் அணிகளுக்கான 'ரிகர்வ்' பிரிவு பைனலில் இந்தியாவின் அடானு தாஸ், திராஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய் இடம் பெற்ற அணி, சீனாவுடன் மோதியது.
முதல் செட் 54-54 என சமன் ஆனது. அடுத்த செட்டை சீனா 58-55 என கைப்பற்றியது. 3வது செட்டில் சற்று தடுமாறிய இந்திய அணி 54-55 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய அணி 1-5 என (54-54, 55-58, 54-55) கணக்கில் தோல்வி யடைந்து, வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. இத்தொடரில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத் தம் 4 பதக்கம் வென்றது.
ஹாக்கி
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, முதலிரண்டு போட்டியில் (ஏப். 26, 27) ஆஸ்தி ரேலியா 'ஏ' அணியை சந்திக்கும். இந்திய அணி, கடைசி மூன்று போட்டி யில் (மே 1, 3, 4) சீனியர் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளும் பெர்த் ஹாக்கி மைதானத்தில் நடக்க உள்ளன.
இத் தொடருக்கான கேப்டனாக சலிமா, துணை கேப்டனாக நவ்னீத் கவுர் நியமிக்கப் பட்டனர். கோல்கீப்பராக சவிதா, பிச்சு தேவி தேர் வாகினர். ஜோதி சிங், சுஜாதா குஜூர், அஜ்மினா குஜூர், பூஜா யாதவ், மஹிமா டென் என, ஐந்து புதுமுக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது
டேபிள் டென்னிஸ்
உலக கோப்பை டேபிள் டென்னிஸ் சீனாவில், (ஒற்றையர்) தொடரில் இந்தியா சார்பில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா பங்கேற்கின்றனர்.
பெண்கள் ஒற்றையர் 'குரூப்-16' முதல் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, பிரான்சின் கிரெட் மேலிஸ் மோதினர். மணிகா 4-0 (11-1, 11-2, 11-6, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, குரூப்-9' முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கான்ஸ்டான்டினா சைஹோ கியோஸ் மோதினர். இதில் ஸ்ரீஜா 3-1 (11-9, 11-4, 11-8, 6-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply