25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அமெரிக்க ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய 3 அமெரிக்க வீரர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமெரிக்க ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய 3 அமெரிக்க வீரர்கள்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில், நடப்பு சாம்பியனும் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலை எதிர்கொண்டார்.

இதில் அல்காரஸ் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 5-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ந்து 18-வது வெற்றியையும் அல்காரஸ் பதிவு செய்தார்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாஃபோ, முன்னாள் சாம்பியனான ரஷியாவின் டேனில் மெட்விடேவை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் டியாஃபோ 7-6 (7-1), 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த எம். ரேவதி, அமெரிக்காவின் மேரி காம்ஸை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News