13TH APRIL ,விளையாட்டு போட்டிகள்
டென்னிஸ்
'பில்லி ஜீன் கிங்' கோப்பை டென்னிஸ் 62வது சீசன் பெண்கள் அணிகளுக்கான 62வது சீசன் புனே யில், 'ஆசிய - ஓசியானா - குரூப் 1' போட்டி நடந்தது. இதில் இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து, நியூ சிலாந்து, ஹாங்காங், சீன தைபே என 6 அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் வீழ்ந்த இந்தியா, அடுத்த மூன்று போட்டி யில் தாய்லாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகளை வென்றது.
கடைசி போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா 5-7, 6-3, 7-6 என தென் கொரியா , வின் சோஹியுன் பார்க்கை வீழ்த்தினார்.
இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரார்த்தனா தாம்பரே ஜோடி 6-4, 6-3 என தென் கொரியாவின் சோஹி யுன் பார்க், தபின் கிம் ஜோடியை வென்றது.முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் 4வது வெற்றி பெற்றது.
புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்த இந்தியா, 5 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது.
வில்வித்தை
உலக கோப்பை வில்வித்தை அமெரிக்காவில் ('ஸ்டேஜ் 1') தொடர் கலப்பு இரட்டையர் 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியாவின் ஜோதி சுரேகா, ரிஷாப் யாதவ் ஜோடி, சீனதைபேயின் ஹுவாங் ஐ-ஜோ, சீ-லுன் சென் ஜோடியை எதிர்கொண்டது.
இந்திய ஜோடி 153-151 (37-38, 38-39, 39-39, 39-36) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட் டிச் சென்றது. இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் 'காம்பவுண்டு' பிரி வில் இந்தியாவின் அபிஷேக், ரிஷாப் யாதவ் ஜோடி வெண்கலம் வென்றிருந்தது.
0
Leave a Reply