25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


சம்பங்கி பயிரிடும் முறை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சம்பங்கி பயிரிடும் முறை.

சம்பங்கி நீலக்கற்றாழையை ஒத்திருக்கும்.இதன் சாறு நறுமண பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.இந்தியாவில் ரஜினிகாந்தா வருடத்திற்கு20 தண்டுகள் வரைக்கும் வளர்ந்து தினம் பூக்கும் தாவரமாகும்.ப்ரஜ்வல், மெக்ஸிகன் சிங்கிள்,பியர்ல்டபுள்,வைபவ்,சுவாளினி,ஸ்ரீகார் போன்ற இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன்,ஜூலை மாதங்கள் ஆகும்.நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் ஏற்றது.மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்த நிலத்தில்2 டன் தொழுவுரத்தை இட்டு இரண்டு முறை உழவு செய்ய வேண்டும்.பிறகு,150 கிலோ வேப்பம் பிண்ணாக்கை நிலம் முழுவதும் தூவி,உழவு செய்ய வேண்டும்.அதன் பின்3 அடி அகலம்,முக்கால் அடி உயரத்தில் தேவைக்கேற்ற நீளம் கொண்டதாக ஒன்றரை அடி இடைவெளியில் பார்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எக்டருக்கு1,12,000 கரணைகள் தேவைப்படும்.கரணைகளை அறுவடை செய்து30 நாட்கள் வைத்திருத்த பின்பே நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.நடவிற்கு முன்பு 5000 பிபிஎம் சிசிசியில் (5 கிராம்/ லிட்டர்)மூழ்கச்செய்து பின்பு கரணைகளை நடவு செய்ய வேண்டும்.

தயார் செய்துள்ள பார்களில்25 முதல்30 கிராம் எடையுள்ள கரணைகளை45x20 செ.மீ இடைவெளியில்25 செ.மீ ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.முதல் பத்து நாட்களுக்கு தினமும் தண்ணீர்விட வேண்டும்.பிறகு,நிலத்தின் தன்மையைப் பொறுத்தும் காலநிலையைப் பொறுத்தும் பாசனம் செய்து கொள்ளலாம்.ஆனால் சம்பங்கி வயலில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது.அதனால் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து,தேவைக்கேற்ப பாசனம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பாசனத்தின் போதும் 150 லிட்டர் இயற்கை உரமான அமுதக்கரைசலைக் கலந்து விட வேண்டும். நடவு செய்த 3-ம் மாதம் ஒவ்வொரு செடியின் அருகிலும் மண்வெட்டியால் பறித்து, செடிக்கு ஒரு கிலோ என்கிற கணக்கில் ஆட்டு எருவை வைத்து, மண்ணால் மூடி விட வேண்டும். மாதம் ஒரு முறை25 கிலோ வேப்பம்பிண்ணாக்கு,50 கிலோ கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும்.

ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 20 கி.கி தழைச்சத்து தரவல்ல 44 கிலோ யூரியா, 80 கி.கி மணிச்சத்து தரவல்ல 500 கிலோ சூப்பர் பாஸ்பேட்,80 கி.கி சாம்பல் சத்து தரவல்ல135 கிலோ மியூரேட் ஆப் பொட்டாஷ் ஆகிய உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு முறையும், பின் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும், மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும் என மூன்று முறை 44 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.

சிறிய செடியாக இருக்கும்பொழுது10 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். பெரிய செடியாக வளர்ந்த பின் களை அதிகமானால் எடுக்க வேண்டும்.இதில் அதிகமாக நோய் தாக்குதல் காணப்படுவது இல்லை. இதில் காணப்படும் ஒரே பிரச்சனை நூற்புழுதாக்குதல் தான்.

நூற்புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு5 கிலோ உயிர் பூஞ்சாணமான விரிடியை எருவில் கலந்து போடவேண்டும் அல்லது கார்போஃப்யூரான் குருணை மருந்தினை ஒரு செடிக்கு ஒரு கிராம் என்ற விகிதத்தில் இட்டு உடனடியாக நீர்ப்பாய்ச்சவேண்டும்.

கரணைகள் முளைத்த பின்பு80 முதல்95 நாட்களில் பூக்களை அறுவடை செய்யலாம். பூக்களை நாள்தோறும் அறுவடை செய்ய வேண்டும். தினசரி சந்தையில் விற்பனை செய்யலாம். பூக்களின் விலை குறையும் போது சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு விற்பனைக்கு கொடுக்கலாம்.ஒரு எக்டருக்கு 14 முதல் 15 டன் மலர்கள் வரை கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News