25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் அங்கீகாரமற்ற 14 இ-கேட்டரிங் இணையதளங்கள் முடக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் அங்கீகாரமற்ற 14 இ-கேட்டரிங் இணையதளங்கள் முடக்கம்.

ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை ஐ.ஆர்.சி.டி.சி. மட்டுமின்றி, அதனால் அங்கீகரிக்கப்பட்ட பிற இ-கேட்டரிங் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) சான்றிதழ் பெறாமல், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் சில அங்கீகாரமற்ற நிறுவனங்கள் இ-கேட்டரிங் சேவையின் பெயரில் உணவு விற்பனை செய்து வருவதாக பயணிகளிடமிருந்து புகார்கள் எழுந்தன.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அங்கீகாரம் பெறாத 14 இ-கேட்டரிங் இணையதளங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ரயில் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்ய விரும்பும் பயணிகள், ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிகாரப்பூர்வ ‘புட் ஆன் ட்ராக்’ (Food on Track) மொபைல் செயலி அல்லது ஐ.ஆர்.சி.டி.சி. அங்கீகரித்த உணவு வழங்குநர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News