25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ரோஸ்மேரி சாகுபடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரோஸ்மேரி சாகுபடி.

ரோஸ்மேரி வேர் நாற்றுகளை ஜூன். ஜூலை மற்றும் செப்.. அக்டோபரில் மானாவாரி பயிராக கடல் மட்டத்தி லிருந்து 900 மீட்டருக்கு மேல் உள்ள மலைப் பிரதேசங்களில் நடவு செய்யலாம். ஒருமுறை நடவு செய்தால்12 ஆண்டுகள் வரை பலன் தரும் என்பதால் வணிகப்பயிராகவும் சாகுபடி செய்யலாம்.

நிலத்தை இரண்டு முறை உழ வேண்டும்.2வது உழவின் போது எக் டேருக்கு50 டன் மட்கிய தொழுஉரம், ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு ஆகி யவற்றை மண்ணுடன் கலக்க வேண் டும். 30 செ.மீ உயரம், 1.5 மீட்டர் அகலம் கொண்ட பாத்திகள் அமைத்து ஒரு ஏக்கருக்கு 20ஆயிரம் நாற்றுகள் நடலாம். நாற்று நடும்போது ஏக்கருக்கு 5 கிலோ அசோஸ்பைரில்லம், 5 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை மண்ணில் இட வேண்டும்.

ரோஸ்மேரி செடிகள் பூப்பதற்கு முன்10 முதல்15 செ.மீ நீளம்' கொண்ட தண்டுகளை வெட்டியெ டுத்து நுனி இலைகளைத் தவிர மற்ற இலைகளை அகற்ற வேண்டும்.

அவற்றை உயிர் உரத்தால் நாற்று நேர்த்தி செய்த பின் சிறு பாலித்தீன் பைகளில் நடவு செய்து நிழலான பகுதியில் வைத்து வளர்க்க வேண்டும். இரு மாதங்களில் நாற்றுகள் வேர் விட்டு நடவுக்கு தயாராகிவிடும்.

இவற்றை வரிசைக்கு வரிசை45 செ.மீ, செடிக்குச் செடி45 செ.மீ இடைவெளியில் நடவேண்டும். இது வறட்சியை தாங்கும் என்றாலும் வறண்ட நேரத்தில் நீர் பாய்ச்சினால் பச்சை இலை மகசூல் அதிகமாக கிடைக்கும்.

நட்டு ஒரு மாதம் கழித்து மண்ணை கொத்தி களை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு 4 அல்லது 5 முறை களை எடுக்க வேண்டும்.

நடவு செய்த இரண்டாம் ஆண்டு முதல் பாஸ்போபாக்டீரியா, அசோஸ் பைரில்லம் உயிர் உரங்களை ஏக்கருக்கு 2 கிலோ எடுத்து தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். 2 மாதங் களுக்கு ஒருமுறை பஞ்சகாவ்யா 3 சதவீத கரைசலை தெளித்தால் மகசூல் 

அதிகரிக்கும். பஞ்சகாவ்யா3 சத கரைசலை இலைவழி தெளிப்பு வருடத்திற்கு5 முறை10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். தசகாவ்யா 3 சத கரைசலை வருடத் திற்கு 3 முறை தெளிக்க வேண்டும். மண்புழு மட்கு வடிநீர் 10 சத கரை சல் வருடத்திற்கு 3 முறை இலைவழி தெளிப்பு மூலம் ஒரு மாத இடைவெளி யில் தெளிக்க வேண்டும்.

ரோஸ்மேரி செடி பூக்கும் சமயத்தில்30 முதல்35 செ.மீ நீளம் கொண்ட பூக்கும் தருணத்தில் உள்ள இலையுடன் கூடிய மேல் தண்டுகளை அறுவடை செய்ய வேண்டும். தண்டுப்பகுதியில் இருந்து ரோஸ்மேரி எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. நாற்றுகள் நட்ட 215 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பின் நான்கு மாத கால இடைவெளியில் ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை

 செய்யலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News