25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


சிவகாசியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் வரும் 21.06.2026  அன்று சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெற உள்ளது.

          இச்சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் ஹூண்டாய் மோட்டார்ஸ் (HYUNDAI MOTORS), சியட் டயர்ஸ் (CEAT TYRES), ஃபாக்ஸ்கான் ஹான் ஹை டெக்னாலஜி (FOXCONN HON HAI TECHNOLOGY), அடையார் ஆனந்த பவன் (ADYAR ANADHA BHAVAN), வி.வி.வி அண்ட் சன்ஸ் எடிபிள் ஆயில் (V.V.V & SONS EDIBLE OIL), ராயல் என்பீல்ட் அகாடமி (ROYAL ENFIELD ACADEMY), பென்குயின் அப்பாரல்ஸ் (PENQUIN APPARELS), டிவிஎஸ் சுந்தரம் பிரேக் லைனிங்ஸ் (TVS SUNDARAM BREKELINING), 5கே கார் கேர் (5K CAR CARE), ஆனைமலைஸ் டொயோட்டா (ANAAMALAIS TOYOTA), டிவிஎஸ் மொபிலிட்டி பாலிமெரிக் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (TVS MOBILITY POLIMARIC PRODUCTS PVT LTD), செயின்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAINT GOBAIN INDIA PVT LTD) போன்ற  50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 3000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள தங்களது சுய விவர சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் Google Form https://forms.gle/hBAJ9cavdPKepNLVA ஐ பதிவு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள்  முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்: 9360171161 அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு (vnrjobfair@gmail.com)  தொடர்பு கொள்ளுமாறு மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News