மூக்கில் மேல் உள்ள பிளாக் ஹெட்ஸ் நீக்க
மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்னை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இவை இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம்.
அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கும், பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும்.நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு, ஆவி பிடித்தல்தான் சரியான ட்ரீட்மென்ட் .மாதம் ஒரு முறை தொடர்ந்து ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கின் மேல் உள்ள புள்ளிகள் நிரந்தரமாக மறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மசித்த வாழைப்பழத்துடன், ஓட்ஸ், சில துளிகள் தேன் சேர்த்து, மூக்கில் தடவி, ஸ்க்ரப் மற்றும் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2 தேக்கரண்டி பட்டை பொடி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஸ்க்ரப் செய்தால் அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை பிளாக் ஹெட்ஸை விரைவில் நீக்கும்.
வாரம் ஒரு முறை முகத்தை ஸ்க்ரப் செய்யும்போது, மூக்கு பகுதியில் பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது.
வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை கலவையை மூக்கின் மீது தடவி மேலிருந்து கீழாக மூக்கை ஒட்டி மசாஜ் செய்தால் சொரசொரப்பு இல்லாமல் பளிச்சென இருக்கும்.
0
Leave a Reply